Newsமுதல் முறையாக நேரில் சந்தித்துக் கொண்ட சீன-ஆஸ்திரேலிய அமைச்சர்கள்!

முதல் முறையாக நேரில் சந்தித்துக் கொண்ட சீன-ஆஸ்திரேலிய அமைச்சர்கள்!

-

ஆஸ்திரேலிய, சீனத் தற்காப்பு அமைச்சர்கள் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக சிங்கப்பூரில் சந்தித்து பேச்சு நடத்தினர். இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மோசமடைந்துள்ள நிலையில் இந்தச் சந்திப்பு முக்கிய முன் னேற்றப்படி என வருணிக்கப் படுகிறது.

“வெளிப்படையான முழுமையான கருத்து பரிமாற்றத்திற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது. ஆஸ்திரேலியாவின் அக்கறைக்குரிய பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி யிருந்தேன்,” என்று ஆஸ்திரேலிய தற்காப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்ல்ஸ் தெரிவித்தார்.

இருதரப்புக்கும் இடையே நடை பெற்ற சந்திப்பை அவர் நேற்று செய்தியாளர்களிடம் உறுதிப்படுத்தினார்.

சிங்கப்பூரில் நடைபெறும் ஷங்ரிலா மாநாட்டையொட்டி மார்ல்சும் சீன தற்காப்பு அமைச்சர் வெய் ஃபெங்கியும் சந்தித்தனர். சுமார் ஒரு மணி நேரம் அவர்கள் கலந்துரையாடினர். தற்போதையக் காலக்கட்டத்தில் வெளிப்படையாக உரையாடுவது முக்கியம் என்று துணைப் பிரதமரு மான திரு மார்ல்ஸ் குறிப்பிட்டார்.

“ஆஸ்திரேலியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவு சிக்கலானது. அதற்கு நேரில் சந்தித்து பேசுவதே நல்லது” என்றும் அவர் சொன்னார். ஆனால் இந்தச் சந்திப்பு பற்றி சீன அரசாங்கமோ ஜெனரல் வெய்யோ உடனடியாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

கொவிட்-19 கிருமி உருவான இடத்தைக் கண்டுபிடிக்க தன்னிச் சையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் ஸ்காட் மோரிசன் வலியுறுத்தினார்.

இது, சீனாவுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. ஆஸ்திரேலியாவில் ‘5ஜி’ கட்டமைப்பை உருவாக்க சீனாவின் தொலைத்தொடர்பு நிறுவனமான ஹுவாவெய்யுக்கு தடை விதிக்கப் பட்டது. இதனால் இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மேலும் மோசம் அடைந்தது.

Latest news

ஜெர்மனியில் முதியோர் காப்பகத்தில் தீ விபத்து – 4 பேர் உயிரிழப்பு

மேற்கு ஜெர்மனியின் வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா மாகாணத்தில் பெட்பர்க்-ஹாவ் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியிலுள்ள முதியோர் காப்பகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. விபத்து தகவல் அறிந்ததும் பொலிஸார் மற்றும்...

மகனின் திருமணத்தில் நடனமாடி அசத்திய நீதா அம்பானி

ரிலையன்ஸ் அறக்கட்டளை நிறுவனரும், தலைமை நிர்வாகியுமான நீதா அம்பானி, தனது மகன் ஆனந்த் - ராதிகா திருமண நிகழ்வில், காஞ்சிபுரம் பட்டுப்புடவை அணிந்து நடனமாடியமை அனைவரின்...

அவுஸ்திரேலியாவில் இளம் வாகன ஓட்டிகளால் அதிகரித்துள்ள சாலை விபத்துகள்

அவுஸ்திரேலியாவில் இளம் வாகன ஓட்டிகளால் ஏற்படும் சாலை விபத்துகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருவதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 2023 ஆம் ஆண்டு வீதி விபத்துக்களினால்...

பச்சை குத்திக் கொண்டவர்களா நீங்கள்? உங்களுக்கு வெளியான அதிர்ச்சிகரமான தகவல்

பச்சை குத்தல்கள் குறித்த சமீபத்திய ஆய்வு அனலிட்டிகல் கெமிஸ்ட்ரி இதழில் வெளியிடப்பட்டுள்ளது. சில மைகளைப் பயன்படுத்தி பச்சை குத்துவது உடல்நல அபாயங்களை ஏற்படுத்தக்கூடும் என்று அது கூறுகிறது. அந்த...

பல்கலைக்கழக கல்விக்கு அதிக மாணவர்களை வழிநடத்தும் புதிய வேலைதிட்டம்

மேலும் ஆஸ்திரேலிய மாணவர்களை பல்கலைக்கழக கல்விக்கு வழிநடத்தும் புதிய திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் முதன்மை நோக்கம் ஆஸ்திரேலிய பொருளாதாரத்தை வலுப்படுத்துவது மற்றும் அதிக ஆஸ்திரேலிய தொழிலாளர்களுக்கு...

ஹைட்டி சிறைக் கலவரத்திற்குப் பிறகு அமெரிக்கா எடுத்துள்ள கடினமான முடிவு

போர்ட்-ஓ-பிரின்ஸில் உள்ள பிரதான சிறைச்சாலையை ஆயுதமேந்திய கும்பல் தாக்கியதையடுத்து, ஹைட்டியில் 72 மணிநேர அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்ததாகவும், சுமார் 3,700 கைதிகள்...