Sportsஅதிரடியாக வெற்றியை பதிவு செய்த பெங்களூரு அணி - IPL 2023

அதிரடியாக வெற்றியை பதிவு செய்த பெங்களூரு அணி – IPL 2023

-

ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலியின் அதிரடி ஆட்டத்தால் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது. நாணய சுழற்சியில் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் டு பிளசிஸ் பந்துவீச்சை தெரிவு செய்தார். இதனையடுத்து ஐதராபாத் அணி முதலில் துடுப்பாட்டத்தில் களமிறங்கியது.

ஹென்ரிச் கிளாசென் அதிரடி காட்டினார். பந்துகளை பவுண்டரி , சிக்சருக்கு பறக்க விட்ட அவர் அரைசதம் அடித்தார். தொடர்ந்து அதிரடி காட்டிய கிளாசென் பெங்களூரு பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். அவர் 49பந்துகளில் சதம் அடித்தார், இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் 5 விக்கெட் இழப்பிற்கு 186 ஓட்டங்கள் எடுத்தது.

187 ஓட்டங்கள் இலக்குடன் களமிறங்கிய பெங்களுரு அணியில் துவக்க வீரர்களாக களமிறங்கிய விராட் கோலி மற்றும் டு பிளசிஸ் தொடக்கம் முதலே பேயாட்டம் ஆடினர்.

ஐதராபாத் பந்துவீச்சை மொத்தமாக நொறுக்கினர். இதில் விராட் கோலி 63 பந்துகளில் 12 பவுண்டரி மற்றும் 4 சிக்சர்களுடன் சதம் அடித்து புவனேஷ்வர் குமார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

டு பிளசிஸ் 47 பந்துகளில் 71 ஓட்டங்கள் குவித்து நடராஜன் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். இதனையடுத்து கிளென் மாக்ஸ்வெல் மற்றும் மைக்கேல் பிராஸ்வெல் ஆகியோர் பெங்களூரு அணியை வெற்றிக்கு இட்டுச்சென்றனர்.

இறுதியில் 4 பந்துகள் எஞ்சியிருக்க 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அபார வெற்றியை பதிவு செய்தது.

Latest news

யாழ்ப்பாணத்தில் தாயைக் கொன்றுவிட்டு “நானே கொன்றேன்” என சுவற்றில் எழுதி வைத்த சிறுவன்

யாழ். தெல்லிப்பளையில் குடும்பப் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், காணாமல் போன அவரது 16 வயது மகன் பொலிசாரிடம் சரணடைந்துள்ள நிலையில், தாயை தானே கொலை...

உலகிலேயே அதிக நேரம் தூங்குபவர்களைக் கொண்ட நாடுகளின் பட்டியல் வெளியானது

மனித தூக்கம் தொடர்பாக ஒரு அமெரிக்க ஆராய்ச்சி குழு நடத்திய ஆய்வின்படி, அந்த தரவரிசையில் 12 மணிநேரத்துடன் பல்கேரியா முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் அகோலா உள்ளது,...

39 ஆண்டுகளுக்குப் பிறகு மாறும் ஆஸ்திரேலியர்களின் விருப்பமான பயண இலக்கு

ஆஸ்திரேலியர்கள் பார்வையிட மிகவும் பிரபலமான 10 நாடுகள் பெயரிடப்பட்டுள்ளன. கடந்த 40 ஆண்டுகளில் தெரிவிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில், மக்கள் தொகை மற்றும் புள்ளியியல் பணியகம் சமீபத்தில் அறிக்கையை...

வீட்டுச் செலவுகளைப் பொறுத்தவரை விக்டோரியாவை விட 5 மாநிலங்கள் முன்னிலை

ஆஸ்திரேலியர்களின் வீட்டுச் செலவு மேலும் 2.1 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு முழுவதும் 4 முக்கிய வகைகளின் கீழ் அவுஸ்திரேலியர்களின் உள்நாட்டுச் செலவு அதிகரித்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அதன்படி,...

விக்டோரியன் குடும்பங்களுக்கு $400 மானியம் வழங்க முடிவு

2024ஆம் ஆண்டுக்கான அரச வரவு செலவுத் திட்டத்தில் குடும்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என விக்டோரியா பிரதமர் ஜெசிந்தா ஆலன் தெரிவித்துள்ளார். மாநிலத்தில் உள்ள 700,000 ஆஸ்திரேலிய குடும்பங்களுக்கு...

ஒரு ஸ்பூன் ஆலிவ் எண்ணெயால் கட்டுப்படுத்தக்கூடிய நோய்கள் என்னென்ன தெரியுமா?

ஹார்வர்டு விஞ்ஞானிகளின் புதிய ஆய்வின்படி, தினமும் ஒரு ஸ்பூன் ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்தினால், டிமென்ஷியாவால் இறக்கும் அபாயத்தைக் குறைக்கலாம். இந்த ஆய்வு 28 வயதுக்கு மேற்பட்ட 92,000...