ஆஸ்திரேலியாவில் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் குறைந்தபட்ச ஊதியத்தை 5.2% உயர்த்தவுள்ளதாக அதிறிவிக்கப்பட்டுள்ள.
இது ஏற்கனவே எதிர்பார்த்ததை விடவும் விட பெரிய அதிகரிப்பாகும் என குறிப்பிடப்படுகின்றது.
ஆஸ்திரேலியாவில் அதிகரிக்கும் வாழ்க்கை செலவு மற்றும் பணவீக்கத்தை கருத்திற் கொண்டு இந்த குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறை மற்றும் பணவீக்கம் இந்த அதிகரிப்பிற்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதென சம்பள ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதற்கமைய குறைந்த பட்ச தேசிய சம்பளம் 21.38 டொலர் வரை அதிகரிக்கின்றது.
இந்த அதிகரிப்பிற்கமைய குறைந்த பட்ச சம்பளம் பெறும் ஊழியருக்கு வாரத்திற்கு 40 டொலர் மேலதிகமாக கிடைக்கின்றது.
ஆஸ்திரேலியாவின் பணவீக்கம் விரைவில் நூற்றுக்கு 6 சதவீதம் அளவு அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டள்ளது. இதனாலேயே உடனடியாக சம்பள அதிகரிப்பை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் 2 மில்லியன் ஆஸ்திரேலிய மக்கள் பயனடைய முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தற்போதைய பிரதமர் தான் அதிகாரத்திற்கு வந்தால் 5.1 சதவீதம் சம்பள அதிகரிப்பு மேற்கொள்வதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.