Newsஅழகி போட்டி கிரீடத்தை துண்டு துண்டாக உடைத்த நபர் - அதிர்ச்சியில்...

அழகி போட்டி கிரீடத்தை துண்டு துண்டாக உடைத்த நபர் – அதிர்ச்சியில் பார்வையாளர்கள்

-

பிரேசில் நாட்டில் மிஸ் பிரேசில் அழகி போட்டியின் இறுதி போட்டி நடைபெற்றது. 

பல்வேறு கட்டங்களாக நடந்த தேர்வுகளின் அடிப்படையில் நதாலி பெக்கர் மற்றும் எமானுவெலி பெலினி ஆகிய 2 பேர் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றனர். 

இதைதொடர்ந்து வெற்றியாளரை அறிவிப்பதற்காக 2 பேரும் மேடை ஏற்றப்பட்டனர். பின்னர் போட்டியில் பெலினி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு அவருக்கு கிரீடம் சூட்டப்பட இருந்தது. 

அப்போது போட்டியில் 2-ம் இடம் பிடித்த நதாலியின் கணவர் திடீரென மேடை ஏறினார். அவர் பெலினிக்கு சூட்டப்பட இருந்த கிரீடத்தை பறித்து தரையில் வீசி உடைத்தார். 

கீழே விழுந்த கிரீடத்தை மீண்டும் எடுத்து மறுபடியும் தரையில் அடித்து உடைத்தார். இதனால் அந்த கிரீடம் துண்டுதுண்டாக உடைந்தது. 

இதைப்பார்த்த நடுவர்கள், விழா ஏற்பாட்டாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

விழா ஏற்பாட்டாளர்கள் ஓடி வந்து அவரை மேடையில் இருந்து கீழே இறக்கினர். 

அப்போது நதாலியின் கணவர் தெரிவிக்கையில் ,

நடுவர்கள் சரியான தீர்ப்பை வழங்கவில்லை. எனவே தான் கோபத்தில் இவ்வாறு செய்தேன் என்றார். ஆனால் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் தான் வெற்றியாளர் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். 

இந்த சம்பவத்தை பார்வையாளர் ஒருவர் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார். அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

Latest news

புதிய NSW வீட்டுத் திட்டத்திற்கு எதிராக போராட்டங்கள்

நியூ சவுத் வேல்ஸின் Camellia-இல் உள்ள ஒரு தொழில்துறை பகுதியில் 10,000 புதிய வீடுகளைக் கட்டும் திட்டம் பல்வேறு தரப்பினரால் விமர்சிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் 2027 ஆம்...

மாணவர் விசா தாமதங்கள் மற்றும் நிராகரிப்புகளைத் தவிர்ப்பதற்கான உதவிக்குறிப்புகள்

மாணவர் விசா விண்ணப்பதாரர்களுக்கான அத்தியாவசிய ஆலோசனைகள் குறித்து ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சகம் மீண்டும் ஒரு ஆலோசனையை வெளியிட்டுள்ளது. அதன்படி, மாணவர் விசாக்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் தங்கள் விண்ணப்பங்களை சரியாக...

மக்கள் பக்கம் சாய்ந்து செயல்பட முயற்சிக்கும் BOM Web

ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையத்தால் கடந்த வாரம் தொடங்கப்பட்ட புதிய வலைத்தளத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து ஏராளமான புகார்கள் வந்ததால், இந்த புதிய...

தேசிய ஊடகங்கள் குறித்து மத்திய காவல்துறைத் தலைவரின் சிறப்பு அறிக்கை

இளம் பெண்கள் ஆன்லைனில் வன்முறைச் செயல்களுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படுவதைத் தடுக்க, மத்திய காவல்துறை ஒரு புதிய பணிக்குழுவை நிறுவத் தயாராகி வருகிறது. மோசடி நபர்கள் ஆன்லைனில் பெண்களை...

தேசிய ஊடகங்கள் குறித்து மத்திய காவல்துறைத் தலைவரின் சிறப்பு அறிக்கை

இளம் பெண்கள் ஆன்லைனில் வன்முறைச் செயல்களுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படுவதைத் தடுக்க, மத்திய காவல்துறை ஒரு புதிய பணிக்குழுவை நிறுவத் தயாராகி வருகிறது. மோசடி நபர்கள் ஆன்லைனில் பெண்களை...

ICU-வில் அனுமதிக்கப்பட்ட இந்திய கிரிகெட் வீரர் ஷ்ரேயாஸ் ஐயர்

உயிருக்கு ஆபத்தான காயத்தால் பாதிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர் ஷ்ரேயாஸ் ஐயர், தற்போது நலமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒக்டோபர் 25 அன்று சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான...