Newsஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக வசிக்க 2068ஆம் ஆண்டு வரை காத்திருக்கும் பெண்?

ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக வசிக்க 2068ஆம் ஆண்டு வரை காத்திருக்கும் பெண்?

-

ஆஸ்திரேலியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் வெளிநாட்டு பெண் குடியுரிமை பெற போராடி வருகின்றார்.

Nicole எனும் தென் ஆப்பிரிக்க பெண் ஆஸ்திரேலியாவை தனது சொந்த நாடாகவே நினைத்து வருகிறார்.

ஆனால், சட்ட ரீதியாக அவர் 2068ம் ஆண்டு வரை ஆஸ்திரேலியாவை தனது நாடக சொல்ல முடியாது.

கடந்த நான்காண்டுகளுக்கு முன்பு, ஒரு இக்கட்டான சூழலில் ஆஸ்திரேலியாவில் வசிப்பதற்காக மீதமுள்ள உறவினர் விசா (Remaining Relative Visa) எனப்படும் நிரந்தர வசிப்பதற்கான உரிமையை வழங்கும் விசாவுக்கு Nicole விண்ணப்பத்திருக்கிறார்.

சொந்த நாட்டில் தனக்கு உறவினர் எவரும் இல்லாமல், நெருக்கமான உறவினர்கள் அனைவரும் ஆஸ்திரேலியாவில் இருக்கும் பட்சத்தில் இந்த விசாவுக்கு ஒருவர் விண்ணப்பிக்கலாம்.

ஆனால், இந்த விசா பரிசீலனைக்கான காத்திருப்புக் காலம் 50 ஆண்டுகள் என்பதால் நிச்சயத்தன்மையற்ற நிலையில் Nicole சிக்கியிருக்கிறார்.

முன்னதாக, அவர் கடந்த 2012ம் ஆண்டு வேலை விடுமுறை விசாவின் கீழ் ஆஸ்திரேலியாவுக்கு சென்று தாதி கல்வி படிக்க தொடங்கியதும் மாணவர் விசாவுக்கு மாறியிருக்கிறார். ஆனால், உடல்நலக்குறைவு காரணமாக அவர் கல்வியை தொடர முடியாத நிலையில் மீதமுள்ள உறவினர் விசாவுக்கு விண்ணப்பத்திருக்கிறார்.

அவரது விசா விண்ணப்பம் தற்போது பரிசீலனையில் உள்ளதால் இணைப்பு விசாவின் மூலம் ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார் என தெரிவிக்கப்படுகின்றது.

Latest news

ஆஸ்திரேலியாவில் அதிகரித்துவரும் கங்காரு விபத்துக்கள்

தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள பிராந்திய சாலைகளில் கங்காருக்களின் நடமாட்டம் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கங்காருக்கள் சம்பந்தப்பட்ட விபத்துக்கள் சுமார்...

குழந்தைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை விதிக்கும் உலகின் முதல் நாடாக ஆஸ்திரேலியா

டிசம்பர் 10 ஆம் திகதி புதிய சட்டம் அமலுக்கு வந்தால், 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் உலகின் முதல் நாடாக...

ஆஸ்திரேலியாவில் தனியார் சுகாதார காப்பீட்டு பிரீமியங்கள் அதிகரிக்குமா?

ஆஸ்திரேலியாவில் தனியார் சுகாதார காப்பீட்டு பிரீமியங்கள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது காப்பீடு செய்துள்ள 15 மில்லியனுக்கும் அதிகமான ஆஸ்திரேலியர்களை ஆபத்தில் ஆழ்த்தக்கூடும் என்று அறிக்கைகள்...

குயின்ஸ்லாந்து காவல்துறை அதிகாரியின் திடீர் மரணம் குறித்து விசாரணை

குயின்ஸ்லாந்து எல்லை ஆணையரும், காவல்துறை தொழிற்சங்கத்தின் முன்னாள் தலைவருமான இயன் லீவர்ஸ், பிரிஸ்பேர்ண் நகரில் உள்ள அவரது வீட்டில் இறந்து கிடந்தார். அவரது மரணத்தை சந்தேகத்திற்குரியதாகக் கருதி...