Newsதமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள 2 புதிய வகை கொரோனா

தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள 2 புதிய வகை கொரோனா

-

ஒமைக்ரானின் உட்பிரிவான எக்ஸ்பிபி வைரஸில் இருந்து உருமாற்றம் அடைந்த 2 புதிய கொரோனா வைரஸ் தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஒமைக்ரான் வைரஸில் இருந்து, கடந்த ஆண்டு செப்டம்பரில் எக்ஸ்பிபி எனும் புதிய வகை வைரஸ் உருவானது. அன்று முதல், ஜனவரி மாதம் வரை இந்த வைரஸ் தொற்றால், 21,979 பேர் பாதிக்கப்பட்டனர். பொது சுகாதாரத்துறை மரபணு பகுப்பாய்வு கூடத்தில், கொரோனா உருமாற்றம் தொடர்பான மரபணு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன.

2 புதிய கொரோனா உருமாற்றம் : இதில்இ கடந்த ஆண்டு செப்டம்பர் தொடக்கம் 2023 ஜனவரி வரை 2,085 பேரின் சளி மாதிரிகள் மரபணு பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இதில் 420 மாதிரிகளில் எக்ஸ்பிபி வகை தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது.

இதில் 98 மாதிரிகள் விரிவான நுண் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இந்த ஆய்வில் உலகில் இதுவரை எங்கும் கண்டறியப்படாத, 2 புதிய கொரோனா உருமாற்றங்களை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

இது தொடர்பான ஆய்வுக் கட்டுரையை பொது சுகாதாரத்துறை சமர்ப்பித்தது. அந்த கட்டுரையை சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த லான்செட் இதழ் 2 நாட்களுக்கு முன்பு வெளியிட்டது. இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இணை இயக்குநர் மருத்துவர் சிவதாஸ் ராஜூ கூறியதாவது:

தடுப்பூசி செலுத்தியவர்களுக்கும் தொற்று: தமிழகத்தில் கடந்த ஆண்டு இறுதியிலும் நடப்பாண்டு தொடக்கத்திலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 81 சதவீதம் பேர் தடுப்பூசிகளை முறையாக செலுத்தியவர்கள். இவர்களில் தீவிர கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் சளி மாதிரிகள் மரபணு பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

இதில் உலகில் வேறெங்கும் பதிவாகாத 2 புதிய வகை வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எனவே கோவிஷீல்ட், கோவேக்சின் தடுப்பூசிகளால் எக்ஸ்பிபி உருமாற்றத்தை தடுக்க முடியாது என்பதை அந்த ஆய்வுக் கட்டுரையில் தெரிவித்துள்ளோம்.

புதிய உருமாற்றங்கள் கண்டறியப்பட்டாலும், தற்போது கொரோனா தொற்று முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதால் இது குறித்த அச்சம் தேவையில்லை. கொரோனா போன்ற பிற வைரஸ் தொற்றுகளையும் மரபணு பகுப்பாய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்றும் அந்த ஆய்வுக் கட்டுரையில் தெரிவித்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலியாவில் அதிகரிக்கப்படும் மதுபானம் மீதான வரிகள்

ஆஸ்திரேலியாவில் இன்று முதல் மதுபானங்கள் மற்றும் முன் கலந்த பானங்களின் விலைகள் அதிகரித்துள்ளன. ஏனென்றால், பணவீக்கத்திற்கு ஏற்ப அரசாங்கம் ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் மதுபான வரியை அதிகரிக்கிறது...

அமெரிக்காவில் பனியுடன் கூடிய வானிலை – 1200 விமானங்கள் இரத்து

அமெரிக்காவில் நிலவும் பனியுடன் கூடிய வானிலை காரணமாக சுமார் 1200 விமானங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் பல்லாயிரக்கணக்கானோர் மின்சாரம் இல்லாமல் தவித்ததாகவும் Bloomberg செய்தி...

இன்று முதல் Economy வகுப்பு பயணிகளுக்கு பல சலுகைகளை வழங்கும் Qantas

Qantas நிறுவனம் இன்று முதல் புதிய Economy Plus திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் Qantas Economy வகுப்பில் பயணிக்கும் பயணிகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Economy Plus திட்டம் பயணிகளுக்கு...

ஜப்பானில் ski lift-இல் சிக்கி ஆஸ்திரேலிய பெண் உயிரிழப்பு

ஜப்பானின் நாகானோ மாகாணத்தில் உள்ள ஒரு பிரபலமான ski ரிசார்ட்டில் ski lift-இல் சிக்கி 22 வயது ஆஸ்திரேலிய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். "பையில் இணைக்கப்பட்டிருந்த இடுப்புப்...

Logan பகுதியில் பல வாகனங்கள் மோதி விபத்து

தென்கிழக்கு குயின்ஸ்லாந்தின் Grater Brisbane பகுதியில் உள்ள Logan நகருக்கு அருகில் பல வாகனங்கள் மோதிக்கொண்டதால், நகரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. Loganholme பசிபிக் மோட்டார்வேயில்...

கடுமையான வெப்பம் காரணமாக ஆஸ்திரேலியாவின் முக்கிய நகரங்களில் மின்சாரம் துண்டிப்பு

பெர்த்தின் வடக்கு புறநகர்ப் பகுதிகளில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை நெருங்கி வருவதால், பல இடங்களில் மின் தடை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Scarborough, Trigg, Doubleview,...