Cinemaபண மோசடி செய்ததாக பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கைது

பண மோசடி செய்ததாக பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கைது

-

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன், பண மோசடி செய்ததாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரபல சின்னத்திரை நடிகை மகாலட்சுமியின் கணவரும் திரைப்பட தயாரிப்பாளருமான ரவீந்தர் சந்திரசேகர் சுமார் 16 கோடி ரூபாய் பண மோசடி செய்யப்பட்டதாக தெரிவித்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையை சேர்ந்த பாலாஜி கபா என்பவர், மாதவ் மீடியா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் சில தினங்களுக்கு முன்பு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் முறைபாடு ஒன்று கொடுத்திருந்தார்.

அதில், லிப்ரா புரொடக்‌ஷன் பிரைவேட் லிமிட்டெட் என்ற நிறுவனத்தை நடத்தி வருகின்ற சினிமா தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரின் அறிமுகம் தனக்கு 2020 ஆம் ஆண்டு கிடைத்ததாக குறிப்பிட்டுள்ளார்.

அப்போது சினிமா தயாரிப்பில் ஈடுபட்டிருந்த ரவீந்தர்இ நகராட்சி திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் திட்டம் ஆரம்பிக்க உள்ளதாக தன்னிடம் கூறியதாகவும் அந்த திட்டத்தில் 200 கோடி வரை முதலீடு செய்தால் இரட்டிப்பாக இலாபம் பார்க்கலாம் என தன்னிடம் ஆசை வார்த்தைகள் கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து, அந்த திட்டத்தை ஆரம்பிப்பதற்கான ஆவணங்களை தன்னிடம் அவர் காண்பித்ததாகவும் பாலாஜி கபா தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் காண்பித்த ஆவணங்களை நம்பி தான் அத்திட்டத்தில் 16 கோடி ரூபாய் வரை முதலீடு செய்ததாக அவர் கூறியுள்ளார்.

ஆனால், கூறியபடி அந்த திட்டம் தொடங்க படாததால் தன் பணத்தை அவர் திரும்ப கேட்டுள்ளார். ஆனால், அதற்கு ரவீந்தர் தனக்கு மிரட்டல் விடுத்ததாக தன் முறைபாட்டில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி தமிழன்

Latest news

Australia Day-யில் முக்கிய நகரங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு

அவுஸ்திரேலியர்கள் மத்தியில் விசேட கவனத்தை ஈர்த்துள்ள அவுஸ்திரேலியா தினத்தன்று (ஜனவரி 26) அந்நாட்டின் முக்கிய நகரங்களில் நிலவும் வானிலை தொடர்பான முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, அன்றைய தினம்...

எலோன் மஸ்கை எச்சரித்துள்ள பிரதமர் ஆண்டனி அல்பானீஸ்

உலகின் நம்பர் ஒன் பணக்காரராகக் கருதப்படும் டெஸ்லா நிறுவனர் எலோன் மஸ்க், எதிர்வரும் ஆஸ்திரேலிய கூட்டாட்சித் தேர்தலில் தலையிட வேண்டாம் என பிரதமர் ஆண்டனி அல்பானீஸ்...

தரத்தில் சிறந்து விளங்கும் விக்டோரியா கல்வித்துறை!

சர்வதேச மாணவர் சமூகம் விக்டோரியாவில் உள்ள பள்ளி அமைப்பை உன்னிப்பாக கவனித்து வருகிறது. மாநில பள்ளிக்கல்வித்துறையில் இருக்கும் தரம் தான் காரணம் என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் உலகம்...

அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் குறைக்கப்படும் கட்டணங்கள்

ஆஸ்திரேலிய கடன் வாங்குபவர்கள் பெப்ரவரி தொடக்கத்தில் வட்டி விகிதக் குறைப்பை எதிர்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சில நிபந்தனைகளை நிறைவேற்றினால் மட்டுமே இந்த குறைப்புகள் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. Castor's...

Online Visa மோசடிகள் பற்றி உள்துறை அமைச்சகம் விடுத்துள்ள செய்தி

ஆஸ்திரேலியர்கள் ஆன்லைன் விசா மோசடிகள் குறித்து ஜாக்கிரதையாக இருக்குமாறு உள்துறை அமைச்சகம் தொடர் சிறப்பு அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு வர எதிர்பார்த்திருக்கும் புலம்பெயர்ந்தோர் மட்டுமன்றி, அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ...