Newsரஷ்யாவுக்கு அதிர்ச்சி கொடுத்த ஆஸ்திரேலியா!

ரஷ்யாவுக்கு அதிர்ச்சி கொடுத்த ஆஸ்திரேலியா!

-

ஆஸ்திரேலியா உக்ரைனுக்கு மேலும் 34 கவச வாகனங்களை வழங்குவதாக அறிவித்துள்ளது.

இதேவேளை, ரஷ்யாவிடமிருந்து தங்கத்தை இறக்குமதி செய்யத் தடை விதிக்கவிருப்பதாகப் பிரதமர் ஆன்டனி ஆல்பனீசி (Anthony Albanese) தெரிவித்துள்ளார்.

உக்ரேன் சென்றுள்ள அவர் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் தலைநகர் கீவ்வில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

ரஷ்ய அமைச்சர்கள், செல்வந்தர்கள் என மேலும் 16 பேருக்குப் பயணத் தடை விதிக்கவிருப்பதாக ஆல்பனீசி கூறினார். ஆஸ்திரேலியா இதுவரை ரஷ்யர்கள் 843 பேருக்குத் தடைகளை விதித்துள்ளது.

உக்ரைனுக்கு மேலும் நூறு மில்லியன் டொலர் இராணுவ உதவி வழங்கப்படும் என்று ஆல்பனீசி கூறினார். ஆனால் அந்த மதிப்பு ஆஸ்திரேலிய டொலரா என்பதை அவர் குறிப்பிடவில்லை.

ஆஸ்திரேலியா உக்ரைனுக்குக் கணிசமான உதவிகளைச் செய்து வருவதாக ஜெலென்ஸ்கி கூறினார்.

Latest news

விக்டோரியன் நீதிமன்றம் ஒரு நிறுவனத்திற்கு வழங்கிய இரட்டிப்பு தண்டனை

விக்டோரியன் மேல்முறையீட்டு நீதிமன்றம், விக்டோரியன் நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட அபராதத்தை இரட்டிப்பாக்க உத்தரவிட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு LH Holding Management ஊழியர் ஒருவர் Forklift வாகனத்தில் சிக்கி...

ஈஸ்டர் வார இறுதியில் ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளில் மழை

ஆஸ்திரேலியாவின் கிட்டத்தட்ட ஒவ்வொரு மாநிலமும் பிரதேசமும் ஈஸ்டர் வார இறுதியில் சிறிது மழையை எதிர்பார்க்கலாம் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், நான்கு நாள் விடுமுறை முழுவதும்...

மாறி மாறி வரிகளை ஏற்றும் சீனா – அமெரிக்கா

அமெரிக்கா மீது விதிக்கப்பட்ட வரிகளை மேலும் அதிகரிக்க சீனா முடிவு செய்துள்ளது. சீனாவிற்கு எதிராக அமெரிக்கா விதித்த மிகப்பெரிய 145% வரிக்கு பதிலளிக்கும் விதமாக இது செய்யப்பட்டதாக...

சீனாவும் ஆஸ்திரேலியாவும் ஒன்று சேர்வதற்கான அறிகுறிகள்

உலகளாவிய வர்த்தகத்தை அதிகரிக்க ஆஸ்திரேலியாவுடன் இணைந்து செயல்பட சீனா தயாராகி வருகிறது. சீன இறக்குமதிகள் மீதான வரிகளை டிரம்ப் 125% ஆக உயர்த்தியதை அடுத்து இந்த நடவடிக்கை...

சீனாவும் ஆஸ்திரேலியாவும் ஒன்று சேர்வதற்கான அறிகுறிகள்

உலகளாவிய வர்த்தகத்தை அதிகரிக்க ஆஸ்திரேலியாவுடன் இணைந்து செயல்பட சீனா தயாராகி வருகிறது. சீன இறக்குமதிகள் மீதான வரிகளை டிரம்ப் 125% ஆக உயர்த்தியதை அடுத்து இந்த நடவடிக்கை...

விக்டோரியாவில் குறைந்துவரும் ஜெசிந்தா ஆலனின் செல்வாக்கு

விக்டோரியன் முதல்வர் ஜெசிந்தா ஆலனின் செல்வாக்கு மாநிலத்தில் குறைந்துள்ளதாக ஒரு கணக்கெடுப்பு வெளிப்படுத்தியுள்ளது. Redbridge நடத்திய கருத்துக் கணிப்பில், ஜெசிந்தா ஆலனின் நிகர திருப்தி மதிப்பீடு எதிர்மறை...