Newsஆஸ்திரேலியாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண நிதி - பிரதமர் அறிவிப்பு

ஆஸ்திரேலியாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண நிதி – பிரதமர் அறிவிப்பு

-

ஆஸ்திரேலியப் பிரதமர் ஆன்டனி அல்பனீசி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாளை முதல் மத்திய அரசாங்கத்தின் நிவாரண நிதி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

நியூ சௌத் வேல்ஸ் (New South Wales) மாநிலத்தில் சுமார் 85,000 குடியிருப்பாளர்கள் வீடுகளை விட்டு வெளியேற நேரிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட இடங்களைச் சேர்ந்த ஒவ்வொரு பெரியவருக்கும் சுமார் 600 வெள்ளியும் ஒவ்வொரு பிள்ளைக்கும் சுமார் 200 வெள்ளியும் ரொக்கமாக வழங்கப்படும்.

பிரதமர் அல்பனீசியும் நியூ சௌத் வேல்ஸின் முதல்வரும் அம்மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் செல்லவிருக்கின்றனர்.

திடீர் வெள்ளம், நிலச்சரிவு ஆகியவை ஏற்படக்கூடிய சாத்தியம் இருப்பதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

ஒரே இரவில் சுமார் 100 பேரைக் காப்பாற்றியதாக மாநில அவசரச் சேவை குழு தெரிவித்துள்ளது.

Latest news

இனி ஆஸ்திரேலியர்களுக்கு $4,000 சேமிக்க ஒரு சிறப்பு வாய்ப்பு

மலிவு விலையில் சூரிய மின்கலங்களை வழங்கும் திட்டத்தை பிரதமர் அந்தோணி அல்பானீஸ் நேற்று (06) அறிவித்தார். மே 3 ஆம் திகதி நடைபெறவிருக்கும் கூட்டாட்சித் தேர்தலில் தொழிலாளர்...

ஆஸ்திரேலியாவில் பணியிட கலாச்சாரத்தை மாற்றும் பெண்கள்

ஆஸ்திரேலியாவில் பணியிட கலாச்சாரத்தை மாற்ற ஆண்களை விட பெண்கள் அதிக உந்துதல் பெறுவதாக ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்துகிறது. ஆண்கள் மாறுவதற்கு ஒப்பீட்டளவில் தயங்குகிறார்கள் என்பதும் தெரியவந்துள்ளது. ஆஸ்திரேலியாவில்...

தொழிலாளர் சட்டங்களை மீறும் ஆஸ்திரேலிய பணியிடங்கள் எதிராக நடவடிக்கை

ஆஸ்திரேலியாவில் உள்ள ஊழியர்கள் தங்கள் முதலாளிக்கு எதிராக இலவச சட்ட ஆலோசனையைப் பெறலாம். The Fair Work Ombudsman மூலம் இந்த இலவச சட்ட ஆலோசனையை பெறலாம். பணியிட...

கஜகஸ்தானில் அரியவகை தாதுக்கள் கண்டுபிடிப்பு

மத்திய ஆசியாவில் உள்ள நாடுகளிலொன்றான கஜகஸ்தானில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரியளவில் அரிய தாதுக்களின் படிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கஜகஸ்தான் நாட்டில் கரகண்டா பிராந்தியத்திற்குள் உள்ள குய்ரெக்டிகோல்...

ஆஸ்திரேலியாவில் பணியிட கலாச்சாரத்தை மாற்றும் பெண்கள்

ஆஸ்திரேலியாவில் பணியிட கலாச்சாரத்தை மாற்ற ஆண்களை விட பெண்கள் அதிக உந்துதல் பெறுவதாக ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்துகிறது. ஆண்கள் மாறுவதற்கு ஒப்பீட்டளவில் தயங்குகிறார்கள் என்பதும் தெரியவந்துள்ளது. ஆஸ்திரேலியாவில்...

டார்ச் லைட்டை வானில் அடித்தவருக்கு ஜெயில்

அதிக வெளிச்சம் கொண்ட டார்ச் லைட்டை விமானத்தை நோக்கி நீட்டிய ஒருவரை மத்திய போலீசார் கைது செய்துள்ளனர். அடிலெய்டில் வசிக்கும் 58 வயதான இந்த நபர், தனது...