கோட்டா குழுவினர் தமது பாதுகாப்புக்காக கோடிக்கணக்கிலான பணத்தினை வீணடித்து வருவதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக இன்று வெள்ளிக்கிழமை அந்த இணையத்தளத்தில் வெளியான செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கோட்டாபய, ரணில், மகிந்த ஆகியோர் தமது பாதுகாப்புக்காக கோடிக்கணக்கில் பணம் செலவு செய்து பல சிறப்பு திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதற்காக யாழ்ப்பாணத்தில் இருந்தும் கொழும்புக்கு காவல்துறையின் நீர்த்தாரகை பீரங்கி வரவழைக்கப்பட்டுள்ளது.
நாட்டில் எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், தொலை தூர இடங்களில் இருந்து வாகனங்களை கொண்டு வந்து வீணடிக்கும் விதம் குறித்து காவல்துறையினரிடம் கூட கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு மேலதிக இராணுவ பாதுகாப்பை வழங்குவதற்காக விஜேராமவில் அமைந்துள்ள அரச நிர்வாக அமைச்சுக்கு சொந்தமான இலக்கம் 117 கட்டடத்தை சிறிலங்கா கடற்படை அல்லது இராணுவத்தினரிடம் ஒப்படைக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.