News கோட்டா குழுவினரை பாதுகாக்க சிறப்பு படையணிகள் வரவழைப்பு

கோட்டா குழுவினரை பாதுகாக்க சிறப்பு படையணிகள் வரவழைப்பு

-

கொழும்பில் நாளை நடைபெறவுள்ள கோட்டாபய ராஜபக்ச குழுவினருக்கு எதிரான ஆர்ப்பாட்டப் பேரணியின் போது மக்களின் எதிர்ப்புக்களை முறியடிக்க, கொழும்புக்கு சிறப்பு படையணிகள் வரவழைக்கப்பட்டுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த இணையத்தளத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பொதுமக்களின் எதிர்ப்பை நாளை சனிக்கிழமை (09.07.2022) எதிர்கொள்ளும் வகையில் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் பாதுகாப்பிற்காக அரச தலைவரின் மாளிகையைச் சுற்றி இரும்பு வேலிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

மேலும் பிரதமர் ரணில் மற்றும் மகிந்த தலைமையிலான அரசாங்கத்தின் ஆட்சியாளர்களின் பாதுகாப்பிற்காக கிட்டத்தட்ட 10,000-க்கும் அதிகமான பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

காவல்துறை பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி பெறும் 1,500 பேர் கூட இந்த பாதுகாப்புப் படைக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், ஏற்கனவே 4,000-க்கும் அதிகமான இராணுவத்தினர் கொழும்புக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். வடமேற்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களில் இருந்து 3,000 காவல்துறையினர், கொழும்புக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். இதற்காக குடிமக்கள் பாதுகாப்பு படைப்பிரிவைச் (Civil defense force) சேர்ந்த சுமார் 1,000 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

படை முகாமிற்கு பாதுகாப்பு படையினரை நிலை நிறுத்தும்போது, முப்படையில் இருந்து இருவர் வீதம் ஒரு காவல்துறை உத்தியோகத்தர் ஈடுபடுத்தப்படுவார். குறைந்தபட்சம் 100 காவல்துறையினரும் 200 இராணுவத்தினரும் சிறப்பு நிலையங்களில் நிறுத்தப்பட வேண்டும் என்பது விதிமுறை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

6 ஆண்டுகளாக ஊழியர்களுக்கு குறைவான ஊதியம் வழங்கியதற்காக UNSW க்கு எதிரான விசாரணை

ஃபேர்வொர்க் ஒம்புட்ஸ்மேன் அலுவலகம், நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம் அல்லது யுஎன்எஸ்டபிள்யூ, ஊதியம் வழங்கப்படாத குற்றச்சாட்டுகளுக்கு எதிராக விசாரணையைத் தொடங்கியுள்ளது.

BREAKING: டேனியல் ஆண்ட்ரூஸ் விக்டோரியாவின் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்

விக்டோரியாவின் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய டேனியல் ஆண்ட்ரூஸ் முடிவு செய்துள்ளார். இதன்படி, நாளை பிற்பகல் 05.00 மணி...

விக்டோரியர்கள் செலுத்த வேண்டிய மீதமுள்ள அபராதம் $850 மில்லியன்

விக்டோரியர்கள் செலுத்த வேண்டிய அபராதத் தொகை 850 மில்லியன் டாலர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இவற்றில் $353 மில்லியன் அதிவேகத்துடன்...

உலகிலேயே தூய்மையான காற்று இங்கு மட்டுமே கிடைக்கும்!

சுத்தமான காற்று, நல்ல குடிநீர், ஆரோக்கியமான உணவு மற்றும் வசிப்பதற்கு இருப்பிடம் ஆகியவைதான் மனிதனின் முதல் தேவைகள் ஆகும்.

உலகிலேயே தூய்மையான காற்று இங்கு மட்டுமே கிடைக்கும்!

சுத்தமான காற்று, நல்ல குடிநீர், ஆரோக்கியமான உணவு மற்றும் வசிப்பதற்கு இருப்பிடம் ஆகியவைதான் மனிதனின் முதல் தேவைகள் ஆகும்.

வகுப்பறைக்குள் அரசியலை கொண்டு வந்ததாக 2 விக்டோரியா பாடசாலைகளுக்கு எதிராக முறைப்பாடுகள்

சுதேசி குரல் வாக்கெடுப்பு தொடர்பில் வகுப்பறைகளுக்குள் அரசியலை கொண்டு வந்தமைக்காக விக்டோரியா மாநிலத்தில் உள்ள 02 பாடசாலைகளுக்கு எதிராக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.