Newsஜனாதிபதி இன்னும் இலங்கையிலேயே இருக்கிறார் - சபாநாயகர்

ஜனாதிபதி இன்னும் இலங்கையிலேயே இருக்கிறார் – சபாநாயகர்

-

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியதாக பிபிசி உலக சேவையிடம் தவறாக கூறியதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் சர்வதேச செய்திச் சேவையான ஏஎன்ஐ உடனான தொலைபேசி உரையாடலில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அதில், “இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்னும் நாட்டில் இருக்கிறார், நான் (பிபிசி) பேட்டியின் போது தவறு செய்துவிட்டேன்” என்று கூறியுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறிவிட்டார், அவர் அண்டைய நாடொன்றில் இருப்பதாகவும், அவர் புதன்கிழமைக்குள் நாட்டுக்கு திரும்புவார் என்றும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று பிபிசியிடம் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடல் மார்க்கமாக திருகோணமலை கடற்படைத் தளத்திற்குச் சென்றதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

திருகோணமலை கடற்படை முகாமில் ஜனாதிபதியுடன் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவும் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Latest news

இந்தியாவின் இறக்குமதி பொருட்களுக்கு 25 % வரியை அறிவித்த ட்ரம்ப்

2025 ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு மேற்கொள்ளப்படும் ஏற்றுமதிகளுக்கு 25% வரி அறவிடப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். யுக்ரைன்...

சீனாவில் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க புதிய திட்டம்

சீனாவில் கடந்த சில ஆண்டுகளாக குழந்தை பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதாகவும் இதனால் சீனாவில் மக்கள் தொகை குறைந்து வருவதாகவும் அந்நாட்டு ஊடகங்கள்...

முர்ரே ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள்

நியூ சவுத் வேல்ஸ்/விக்டோரியன் எல்லையில் உள்ள மில்டுரா அருகே முர்ரே நதிக்கு அப்பால் உள்ள புதர் நிலத்தில் மனித மண்டை ஓட்டின் பகுதி எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. திங்கட்கிழமை...

பயணிகளுக்கு சிறப்பு தள்ளுபடியை வழங்கும் இரண்டு ஆஸ்திரேலிய விமான நிறுவனங்கள்

ஆஸ்திரேலியாவின் இரண்டு முக்கிய விமான நிறுவனங்களான Qantas மற்றும் Jetstar, இந்த ஆண்டு சிறப்பு தள்ளுபடிகளை வழங்கத் தொடங்கியுள்ளன. அதன்படி, உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களுக்கு இந்த...