ஈரானை கண்டு அமெரிக்கா அச்சம்; மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றத்தை தூண்டுவதாக ஈரான் குற்றச்சாட்டு

0
350

மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றத்தை உருவாக்க அமெரிக்கா மீண்டும் முயற்சிப்பதாக ஈரான் குற்றம்சாட்டியுள்ளது. அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக ஜோ பைடன் மத்திய கிழக்கு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஒருபுறம் சீனாவை எதிர்கொள்ள மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை அமெரிக்கா இப்போது எடுத்துள்ளது. இந்த நடவடிக்கை ஈரானை கோபப்படுத்தியுள்ளது. மேலும், ஜோ பைடனின் இந்த பயணம் ஈரானை மறைமுகமாக எச்சரிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த நிலையில், பைடனின் இந்தப் பயணத்தை ஈரான் கடுமையாக விமர்சித்துள்ளது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மத்திய கிழக்கு நாடுகளின் பயணத்திற்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக ஈரான் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக கண்டன போராட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. ஈரானின் அணுசக்தி திட்டத்திற்காக, அதன் மீதான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா நீக்கியதால், சவுதி அரேபியாவுடனான அமெரிக்காவின் உறவு பாதிக்கப்பட்டது. இருப்பினும், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் தடைகளை விதித்தார். இப்போது இந்த விஷயத்தில் ஈரானுடன் அமெரிக்கா மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துகிறது. அமெரிக்க வெளியுறவுக் கொள்கை எல்லாம் குழப்பமாக உள்ளது என்பதையே இது உணர்த்துகிறது.

இதுகுறித்து அந்நாட்டு வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் நஸர் கனானி வெளியிட்ட அறிக்கையில் , “ஈரானோபோபியா (ஈரான் குறித்து அச்சம்) மூலம் பிராந்தியம் முழுவதும் பதற்றங்களையும் நெருக்கடிகளையும் உருவாக்க அமெரிக்கா மீண்டும் முயற்சிக்கிறது. அணுகுண்டை முதலில் பயன்படுத்திய நாடு அமெரிக்கா. ஆனால், அமெரிக்காவோ மற்ற நாடுகளின் அணுசக்தி விவகாரங்களில் தொடர்ந்து தலையிடுகிறது. ஆயுத மோதல்களைத் தொடங்கியுள்ளது. பிராந்தியத்தில் ஆயுதங்களை விற்பனை செய்து வருகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

Previous articleலோகேஷ் கனகராஜ் படத்தில் வில்லியாக நடிக்கிறாரா சமந்தா?
Next articleபூமியின் 98.8 சதவீத பகுதிகளை விட இங்கிலாந்தில் வெப்பம் அதிகமாக இருக்கும் – நியூசிலாந்து வானிலை ஆய்வாளர்