Sydneyதிருமணத்துக்காக தயாராகிக்கொண்டிருந்த மணப்பெண் சிட்னி கத்திக்குத்து தாக்குதலில் கொலை!

திருமணத்துக்காக தயாராகிக்கொண்டிருந்த மணப்பெண் சிட்னி கத்திக்குத்து தாக்குதலில் கொலை!

-

அவுஸ்திரேலியாவில் கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்ட ஒருவர் ஆறு பேரைக் கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் உலக நாடுகள் பலவற்றில் அதிர்வலைகளை உருவாக்கியுள்ள நிலையில், உயிரிழந்தவர்களில் ஒருவர் தனது திருமணத்துக்காக தயாராகிக்கொண்டிருந்த மணப்பெண் என ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

சனிக்கிழமை மதியம் 3.45 மணியளவில், அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் அமைந்துள்ள மால் ஒன்றில் மர்ம நபர் ஒருவர் பொதுமக்களை சரமாரியாக கத்தியால் குத்தத் துவங்கியுள்ளார்.

கொல்லப்பட்டவர்களில் ஒருவர் கோடீஸ்வர குடும்பம் ஒன்றைச் சேர்ந்த Dawn Singleton என்னும் இளம்பெண். அவரும் அவரைத் திருமணம் செய்துகொள்ளவிருந்த Ashley Wildeyயும், திருமணத்துக்காக அழைப்பிதழ்கள் விநியோகிக்கும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்திருக்கிறார்கள்.

Dawn உடைய திருமண உடை கூட தயாராகிவிட்ட நிலையில், பொலிசாராக பணியாற்றும் Ashleyக்கு சிட்னி மால் ஒன்றில் நடந்த கத்திக்குத்து சம்பவம் குறித்து தகவல் கிடைக்க, உடனடியாக அங்கு ஓடியிருக்கிறார்.

பிறகுதான் அவருக்குத் தெரிந்திருக்கிறது, கத்திக்குத்து தாக்குதலில் உயிரிழந்தவர்களில், தான் திருமணம் செய்துகொள்ளவிருந்த Dawnம் ஒருவர் என்பது.

நிலைகுலைந்துபோன Ashleyயை சக பொலிசார் தேற்றமுடியாமல் திகைத்துப்போய் நின்றிருக்கிறார்கள். இந்த துயர சம்பவத்தில், பாகிஸ்தான் நாட்டவர் ஒருவர், சீனப்பெண் ஒருவர் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். ஒரு ஒன்பது மாதக் குழந்தை உட்பட பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Latest news

மன்னர் சார்லஸை சந்தித்த தெற்கு ஆஸ்திரேலிய பிரதமர்

தெற்கு ஆஸ்திரேலிய பிரதமர் Peter Malinauskas, லண்டனில் உள்ள கிளாரன்ஸ் ஹவுஸில் மன்னர் சார்லஸை சந்தித்து, மாநிலத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் குறித்து கலந்துறையாடியுள்ளார். Malinauskas-இன் ஏழு...

Aldi-இல் இருந்து புதிய சூரிய ஆற்றல் சேவை

Aldi பல்பொருள் அங்காடி சங்கிலி விக்டோரியாவில் உள்ள மக்களுக்கு சூரிய சக்தி மற்றும் பேட்டரி தொகுப்புகளை வழங்கத் தொடங்கியுள்ளது. அதன்படி, 10kWh பேட்டரி, 6.6kW சோலார் சிஸ்டம்...

அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட இளம் அரசியல் ஆர்வலர்

பிரபல அமெரிக்க வர்ணனையாளரும் கன்சர்வேடிவ் கட்சி ஆர்வலருமான Charlie Kirk, சில மணி நேரங்களுக்கு முன்பு அமெரிக்காவின் உட்டாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் நடந்த வெளிப்புற...

ANU துணைவேந்தர் ராஜினாமா செய்தார்

பல மாத சர்ச்சைகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவியை Genevieve Bell ராஜினாமா செய்துள்ளார். ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் 13வது துணைவேந்தராக Genevieve Bell...

அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட இளம் அரசியல் ஆர்வலர்

பிரபல அமெரிக்க வர்ணனையாளரும் கன்சர்வேடிவ் கட்சி ஆர்வலருமான Charlie Kirk, சில மணி நேரங்களுக்கு முன்பு அமெரிக்காவின் உட்டாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் நடந்த வெளிப்புற...

ANU துணைவேந்தர் ராஜினாமா செய்தார்

பல மாத சர்ச்சைகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவியை Genevieve Bell ராஜினாமா செய்துள்ளார். ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் 13வது துணைவேந்தராக Genevieve Bell...