ஆஸ்திரேலியர்களின் பாதுகாப்பைப் பேணுவது எனது முதல் கடமை என்று பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.
பிரதமருடன் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, சிட்னியில் உள்ள கேரவன் ஒன்றில் காணப்பட்ட வெடிபொருட்களின் இருப்பு குறித்து ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
காவல்துறை மற்றும் புலனாய்வு அமைப்புகளின் விசாரணைகளுக்கு எங்களது அதிகபட்ச ஆதரவை வழங்குவதே இரண்டாவது நோக்கம் என்று அந்தோணி கூறினார்
சிட்னியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் தேசிய அமைச்சரவைக் கூட்டத்தின் அவசியத்தை பிரதி எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தியதாக ஊடகவியலாளர் பிரதமரிடம் கேள்வி எழுப்பினார்.
இது அரசியல் விவாதமாக இருக்கக் கூடாது எனவும் தற்போது நடைபெற்று வரும் விசாரணைகள் தொடர்பில் பகிரங்க அறிக்கைகளை வெளியிடுவது பொருத்தமற்றது எனவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.





