Newsசிட்னி ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற 60,000க்கும் மேற்பட்ட மக்கள்

சிட்னி ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற 60,000க்கும் மேற்பட்ட மக்கள்

-

ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்தின் தலைநகர் சிட்னியில் பெரிய அளவில் சாலை ஓட்டப்பந்தயம் இடம்பெற்றுள்ளது.

அதில் 60,000க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். City2Surf எனும் நிகழ்ச்சியில் உலகின் ஆகப்பெரிய கேளிக்கை ஓட்டப்பந்தயம் இடம்பெற்றது.

ஆஸ்திரேலியாவின் ஆகப்பெரிய நகரான சிட்னியின் ஹைட் பார்க் முதல் போண்டி பீச் (Hyde Park, Bondi Beach) வரையிலான சாலை ஓட்டப் பாதையின் நீளம் 14 கிலோமீட்டர்.

டைனசார், கொரில்லா, நட்சத்திரங்கள் எனப் பல்வேறு மாறுவேடங்களிட்டவண்ணம் பங்கேற்பாளர்கள் பந்தயத்தில் கலந்துகொண்டனர்.

கடந்த ஈராண்டாகக் கோவிட் நோய்ப்பரவலால் நேரடியாக ஓட்டப்பந்தயம் நடைபெறவில்லை. இருப்பினும் மெய்நிகர் வழியாக City2Surf ஓட்டப்பந்தயங்கள் நடத்தப்பட்டன.

1971ஆம் ஆண்டில் முதன்முதலில் நடைபெற்ற City2Surf நிகழ்ச்சி ஆஸ்திரேலியாவின் தொண்டு நிறுவனங்கள் பலவற்றுக்கு மில்லியன்கணக்கான டொலர் நிதியைத் திரட்டுகிறது.

Latest news

300 புதிய தொண்டு நிறுவனங்களுக்கு ஆதரவு வழங்கவுள்ளார் மன்னர் சார்ல்ஸ்

பிரித்தானிய மன்னர் 3ம் சார்லஸ் புதிதாக 300 தொண்டு நிறுவனங்களுக்கு ஆதரவு வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் அரியணை ஏறிய பிரித்தானிய...

Al Jazeera அலுவலகத்தை மூடுமாறு இஸ்ரேல் உத்தரவு!

இஸ்ரேல் அதிகாரிகள் Al Jazeera அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை படையெடுத்தனர். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் (Hamas) இடையே போர் பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், கத்தார் நாடு போர்...

கிணற்றில் கண்டெடுக்கப்பட்டுள்ள காணாமல் போன அவுஸ்திரேலிய சகோதரர்களின் சடலங்கள்

பல நாட்களாக காணாமல் போயிருந்த இரண்டு அவுஸ்திரேலிய சகோதரர்கள் மற்றும் ஒரு அமெரிக்க சுற்றுலாப் பயணியின் சடலங்கள் குடும்ப உறுப்பினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளன. டிஎன்ஏ ஆதாரம் இல்லாமல்...

Qantas பயணிகளுக்கு $20 மில்லியன் அபராதம் செலுத்த வேண்டும்

Qantas Airlines, சரிபார்க்கப்பட்ட விமானங்களுக்கு வாடிக்கையாளர்களுக்கு $20 மில்லியன் பணத்தைத் அபராதமாக செலுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. கூடுதலாக, குவாண்டாஸ் விமானம் ரத்து அல்லது தாமதம் குறித்த சரியான...

Qantas பயணிகளுக்கு $20 மில்லியன் அபராதம் செலுத்த வேண்டும்

Qantas Airlines, சரிபார்க்கப்பட்ட விமானங்களுக்கு வாடிக்கையாளர்களுக்கு $20 மில்லியன் பணத்தைத் அபராதமாக செலுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. கூடுதலாக, குவாண்டாஸ் விமானம் ரத்து அல்லது தாமதம் குறித்த சரியான...

T20க்கு தகுதி பெற்ற ஆஸ்திரேலிய மகளிர் அணி

T20 உலகக் கோப்பைக்கு ஆஸ்திரேலிய மகளிர் அணி தகுதி பெற்றுள்ளது. வங்கதேசத்தில் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள போட்டிக்கான போட்டி பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் இந்தியாவை...