Articleபசி, பட்டினியை நோக்கி இலங்கை.. 6 லட்சம் அரசு ஊழியர்களுக்கு வேலை...

பசி, பட்டினியை நோக்கி இலங்கை.. 6 லட்சம் அரசு ஊழியர்களுக்கு வேலை போகும் அபாயம்

-

ஆட்சி மாறி, புதிய பிரதமர் வந்த பிறகும் கூட இலங்கையின் நிலைமை மோசமாகி வருகிறது. IMF கடன் மறு சீரமைப்பின் கீழ் சுமார் 6 லட்சம் அரச ஊழியர்கள் வேலை இழக்கலாம். முடிவில் நடுத்தர வர்க்கம் என்ற ஒன்று இல்லாமல் போகும்.. என்ற அச்சம் எழுந்துள்ளது.

வாழ்ந்தால் வாழுங்கள், இல்லையேல் செத்து மடியுங்கள் என்பது போலதான் இருக்கிறது பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு. கிட்டத்தட்ட 30% அளவுக்கு விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரும், மின்சார கட்டணம் 100 வீதம் அதிகரிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

விலை உயர்வு காரணமாக மக்கள் தொகையின் 80 சதவீதம் பேர் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. தினசரி செலவுகள் அதிகரிக்கும், பசி, பட்டினி அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளது. IMF உடனான பேச்சுவார்த்தைகள், அதிகாரிகள் மட்டத்தை தாண்டவில்லை. இந்த பேச்சுவார்த்தைகள் ஒரு நம்பிக்கை தரும் அளவுக்கு வர 6-8 மாதங்கள் எடுக்கலாம். இந்த கால பகுதியில் அரசாங்கம் எந்தவித விலை கட்டுப்பாடுகளையும் கொண்டிருக்கமுடியாது. காரணம் ஐஎம்எப் உடன் பேச்சுவார்த்தை முடியும் வரை அரசு எதையும் நிர்ணயிக்க முடியாது. இதுதான் ஐஎம்எப்பின் விதியாகும்.

ஐஎம்எப் உடன் பேச்சுவார்த்தை நடத்த, சட்ட உதவிகளைச் செய்ய Clifford Chance என்ற நிறுவனத்தை இலங்கை அரசாங்கம் தேர்வு செய்துள்ளது. நிதித்துறை ஆலோசனை உதவிகளை வழங்க பிரெஞ்சு நிறுவனமான Lazard நியமிக்கப்பட்டுள்ளது. பேச்சுக்களை தொடங்க முன் நிபந்தனையாக எரி பொருட்களுக்கான எல்லா சலுகலைகளையும் நீக்குமாறு இலங்கை அரசாங்கம் கேட்டுக் கொள்ளப்படும் என்று இது தொடர்பாக ராய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ள குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை விட முக்கியமாக, அரசு ஊழியர்கள் எண்ணிக்கை அப்படியே பாதியாக குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. எரிபொருள் சேமிப்பை காரணம் காட்டி அத்தியாவசிய ஊழியர்களை மட்டும் வேலைக்கு அழைத்தல் என்பது ஒரு பெரும் வேலைநீக்க திட்டத்தின் முதல் கட்டம் என்பது தெளிவாக தெரிகிறது.

கல்வி துறை , சுகாதார சிற்றூழியர்கள் மட்டும் இன்றி – குறிப்பாக மின்துறை, பெட்ரோலிய கூட்டுத்தாபனம் போன்ற அரச நிறுவனங்களில் பெரும் வேலை நீக்கங்கள் காத்திருக்கின்றன. 2017 ஆம் ஆண்டு சுமார் 1.49 மில்லியனாக இருந்த அரச ஊழியர்கள் 2021 இல் 2 மில்லியனயாக அதிகரித்தது -இதில் பெரும் எண்ணிக்கை அரசியல் காரணங்களுக்காக வழங்கப்பட்ட நியமனங்கள்.

பாதுகாப்பு செலவீனங்களை குறைத்து -ராணுவத்தின் எண்ணிக்கையை குறைக்குமாறு கோரப்பட்டால் மொத்த பேச்சுவார்த்தையும் தரை மட்டம் ஆகும்ம் வாய்ப்பு கூட இருக்குறது. -ராணுவ செலவீனத்தில் கைவைக்க கோத்தபாய விரும்பப் போவதில்லை. இந்திய கடனுதவி முடிவுக்கு வரும் நிலையில் இலங்கை அரசாங்கத்துக்கு அடுத்து வரும் மாதங்களை கொண்டு நடத்த கடைசியாக ஒரு வழி மட்டுமே மீதமுள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கி -உலகவங்கி ஆகிய அமைப்புக்கள் ஏற்கனவே இலங்கையில் அனுமதித்த அபிவிருத்தி திட்டங்களுக்காக வழங்கப்பட்ட சுமார் 1100 மில்லியன் டாலர் நிதி இலங்கையின் கைவசம் இருக்கிறது. இந்த நிதி சட்ட ரீதியில் குறிப்பிட்ட அபிவிருத்தி திட்டங்களுக்கு அல்லாமல் அத்தியாவசிய தேவைகளுக்கு பயன்படுத்த முடியாது. ஆனால் இந்த நெருக்கடியை கருத்தில் கொண்டு சில கொள்கை ரீதியிலான தளர்வுகளை மேற்கொள்ள இந்த இரண்டு வங்கிகளும் உடன்பாடு தெரிவிக்கலாம் என்று நம்பப்படுகிறது .

ரணில் விக்ரமசிங்கவின் கோரிக்கைக்கு சாதகமான பதில் கிடைத்துள்ளதாக தெரியவருகிறது. ஆனாலும் இந்த பணத்தை எரிபொருள் இறக்குமதிக்கு பயன்படுத்த முடியாது என்று திட்டவட்டமாக கூறப்பட்டுள்ள நிலையில், மருந்து மற்றும் உணவுக்காக அது பயன்படலாம்.

IMF ன் நேரடி நிதி உதவி கிடைக்க நீண்ட காலம் எடுக்கலாம். சீனா ஏற்கனவே தனது கடனை IMF திட்டத்தின் கீழ் மீளமைப்பதை கடுமையாக எதிர்க்கும் நிலையில் இலங்கையின் கடன் மறு சீரமைப்பு என்பது கண்ணுக்கு எட்டிய தூரத்தில் இல்லை. இலங்கையை விட சிக்கல் குறைந்த ஒரு கடன் மறுசீரமைப்பை அன்மையில் ஆபிரிக்க நாடான கம்பியா மேற்கொண்டது. ஆனால் அதற்கு 2 ஆண்டுகள் பிடித்தது.

இந்த பேச்சு வார்த்தைகள் முடியும் போது உணவுக்கு வழியில்லாத கடுமையான ஏழைகள் என்று ஒரு பகுதியும், அரசியலோடும் பெரும் முதலாளித்துவ வர்த்தகத்தோடும் தொடர்பு கொண்ட ஒரு பணக்கார சமூகமுமாக, இலங்கை தெளிவான இரண்டு கோடுகளால் பிரிக்கப்பட்டிருக்கும் -நடுத்தர வர்க்கம் என்ற ஒன்று இருக்காது- பொதுவாகவே இப்படியான எல்லையற்ற ஊழல் -கடன் மற்றும் மூலதன சுரண்டல்களின் முடிவு அப்படிதான் அமையும் என்பதை வரலாறு திரும்ப திரும்ப சொல்கிறது.

Latest news

கிறிஸ்துமஸ் பண்டிகைகளின் போது செல்லப்பிராணிகளை பாதிக்கும் மனச்சோர்வு

கிறிஸ்துமஸ் காலத்தில் செல்லப்பிராணிகளுக்கு ஏற்படும் மறைக்கப்பட்ட ஆபத்துகள் குறித்து ஆஸ்திரேலிய கால்நடை மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். வீடுகளில் வசிக்கும் செல்லப்பிராணிகள் அதிக சத்தம், தெரியாத விருந்தினர்களின் வருகை, பட்டாசு...

NSW நாடாளுமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகள்

நீண்ட விவாதத்திற்குப் பிறகு, நியூ சவுத் வேல்ஸ் (NSW) பாராளுமன்றம் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் துப்பாக்கிச் சட்ட சீர்திருத்தங்களின் புதிய தொகுப்பை நிறைவேற்றுவதில் வெற்றி பெற்றுள்ளது. பசுமைக்...

விக்டோரியாவில் கிறிஸ்துமஸ் பயணத்தை எளிதாக்க கூடுதல் சேவைகள்

அதிகரித்து வரும் விமானக் கட்டணங்கள் மற்றும் எரிபொருள் விலைகள் காரணமாக, இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் விக்டோரிய மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல பொதுப் போக்குவரத்தை...

போப் லியோ XIV இன் முதல் கிறிஸ்துமஸ் செய்தி

போப் லியோ XIV தனது முதல் கிறிஸ்துமஸ் ஈவ் திருப்பலியைக் கொண்டாடினார். வத்திக்கானில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் கிறிஸ்துமஸ் நள்ளிரவு திருப்பலியைக் கொண்டாடிய போப் லியோ,...

போப் லியோ XIV இன் முதல் கிறிஸ்துமஸ் செய்தி

போப் லியோ XIV தனது முதல் கிறிஸ்துமஸ் ஈவ் திருப்பலியைக் கொண்டாடினார். வத்திக்கானில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் கிறிஸ்துமஸ் நள்ளிரவு திருப்பலியைக் கொண்டாடிய போப் லியோ,...

மெல்பேர்ணில் தீ வைத்து எரிக்கப்பட்ட ஹனுக்கா அடையாளத்துடன் கூடிய கார்

மெல்பேர்ண், St Kilda East-இல் "Happy Chanukah" என்று எழுதப்பட்ட பலகையை வைத்திருந்த காரை ஒரு கும்பல் தீ வைத்து எரித்துள்ளது. இந்த சம்பவம் இன்று அதிகாலை...