மெல்போர்னின் தென்மேற்கு பகுதியில் சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டதால் ரயில் பாதை கடுமையாக சேதமடைந்துள்ளது.
Inverleigh மற்றும் Gheringhapக்கு இடையிலான Hamilton நெடுஞ்சாலைக்கு அருகில் இன்று அதிகாலை 10க்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் தடம் புரண்டதாக கூறப்படுகிறது.
அப்போது, ரயிலில் பயணிகள் யாரும் இல்லை, சாரதி மட்டும் பயணம் செய்துள்ளார்.
இந்த விபத்தால், மெல்போர்ன்-அடிலெய்டு சரக்கு ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கனமழை காரணமாக விக்டோரியா – நியூ சவுத் வேல்ஸ் மற்றும் தெற்கு அவுஸ்திரேலியாவின் பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், இந்த மோசமான வானிலை டிசம்பர் மாதம் வரை தொடரலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.