ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய சூதாட்ட நிறுவனமான Crown Resortsக்கு 80 மில்லியன் ஆஸ்திரேலிய டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
விக்டோரியாவின் சூதாட்ட, சூதாட்டத்தளக் கட்டுப்பாட்டு ஆணையம் Crown மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்ற மாதம் தெரிவித்திருந்தது.
2012க்கும் 2016க்கும் இடைப்பட்ட காலத்தில் Crownக்கும் சீனாவுக்கும் இடையில் சட்டவிரோதமான பணமாற்றம் இடம்பெற்றதாக ஆணையம் குறிப்பிட்டது.
அதன்மூலம் சுமார் 164 ஆஸ்திரேலிய டாலர் வாடிக்கையாளர்களுக்குச் சென்றது. அதிலிருந்து 32 மில்லியனுக்கும் மேற்பட்ட ஆஸ்திரேலிய டாலரை Crown பெற்றதாக ஆணையம் குறிப்பிட்டது.
அதன் குறைபாடுகளை Crown ஒப்புக்கொண்டது. சென்ற ஆண்டு அக்டோபர் மாதத்தில் Crown அதன் மெல்பர்ன் சூதாட்ட உரிமத்தை இழந்தது. இருப்பினும் அது ஆக அதிகமான பணத்தை ஈட்டும் அதன் சூதாட்டத்தளத்தைக் கண்காணிப்பின்கீழ் நடத்த அனுமதிக்கப்பட்டது.