Cinema டி.ராஜேந்தருக்கு உடல்நல பாதிப்பு...மேல்சிகிச்சைக்கு வெளிநாடு கொண்டு செல்ல முடிவு

டி.ராஜேந்தருக்கு உடல்நல பாதிப்பு…மேல்சிகிச்சைக்கு வெளிநாடு கொண்டு செல்ல முடிவு

-

தமிழ் சினிமா நடிகரும், இயக்குனருமான டி.ராஜேந்தர் திடீர் உடல்நல பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டி.ராஜேந்தர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி வெளியில் பரவியதால், தவறான தகவல்கள் பரவுவதை தடுக்க அவரது மகனும் நடிகருமான சிலம்பரசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், திடீர் நெஞ்சு வலி காரணமாக எனது தந்தை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில், அவருக்கு வயிற்றில் லேசான ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அவரது உடல்நிலையை கவனித்தில் கொண்டு அவரை உயர் சிகிச்சைக்காக சிங்கப்பூர் அழைத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. எனது தந்தை நல்ல சுய நினைவுடன் உள்ளார். அவருக்காக பிரார்த்தனை செய்து, அன்பு காட்டு ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி என குறிப்பிட்டுள்ளார்.

டி.ராஜேந்தர் விரைவில் பூரணமாக குணமடைந்து வருவார்கள். விரைவில் அவர் ரசிகர்களை மீண்டும் சந்திப்பார் என சிலம்பரசன் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். டி.ராஜேந்தர் விரைவில் குணமடைய வேண்டி ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். டி.ராஜேந்தர் தற்போதும் சில படங்களில் நடித்து வருகிறார்கள். இதனால் தற்போதும் தினமும் 15 பேர் வரை அவரை சந்தித்து வருவதாக டி.ராஜேந்தரின் மனைவி உஷா ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

1980 களில் சினிமாவில் அறிமுகமான டி.ராஜேந்தர், நடிகர், இயக்குனர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் என பல திறமைகளை வெளிக்காட்டி வருகிறார். டி.ராஜேந்தரை உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்து செல்லலாமா என அவரது குடும்பத்தினர் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இன்னும் இரண்டு நாட்களில் விசா நடவடிக்கைகள் நிறைவடைந்ததும், வெளிநாட்டிற்கு புறப்பட உள்ளதாக உஷா ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

Latest news

ஆபத்தான வைரஸ் பற்றி NSW குடியிருப்பாளர்களுக்கு எச்சரிக்கை

நியூ சவுத் வேல்ஸ் மாநிலம் முழுவதும் ஆபத்தான வைரஸ் பரவி வருகிறது. உள்ளிழுத்தல் மற்றும் வெளியேற்றம் மூலம் பரவும்...

பல குயின்ஸ்லாந்து பிராந்தியங்களில் பெட்ரோல் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது

பிரிஸ்பேன் உட்பட குயின்ஸ்லாந்தின் பல பகுதிகளில் பெட்ரோல் விலை வரலாறு காணாத மதிப்பை பதிவு செய்துள்ளது. ஒரு லீற்றர்...

ஆஸ்திரேலியாவில் பணவீக்கம் மீண்டும் 5.2% உயர்வு

அவுஸ்திரேலியாவில் 04 மாதங்களாக குறைந்திருந்த பணவீக்கம் மீண்டும் அதிகரித்துள்ளது. புள்ளிவிபரப் பணியகம் இன்று வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, ஆகஸ்ட்...

விக்டோரியாவின் பிரீமியர் பதவிக்கு கடுமையான போராட்டம் – ஜெசிந்தா ஆலன் முன்னிலையில்

இன்று மாலை 5.00 மணிக்குப் பின்னர் காலியாகவுள்ள விக்டோரியா பிரீமியர் பதவிக்கு விக்டோரியா தொழிலாளர் கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்கு இடையே கடும் மோதல்...

குயின்ஸ்லாந்து Go Card வைத்திருப்பவர்களுக்கு சிறப்பு அறிவிப்பு

குயின்ஸ்லாந்தின் பொதுப் போக்குவரத்து சேவைகளுக்கான புதிய ஸ்மார்ட் டிக்கெட் முறையை அறிமுகப்படுத்துவதற்கு முன், GO கார்டு பயனர்கள் தங்கள் நிலுவைகளை திரும்பப் பெறுமாறு...

மேற்கு ஆஸ்திரேலியா போலீஸ் சேவைக்கு விண்ணப்பிக்கும் வெளிநாட்டவர்களுக்கு விசா பெறுவதில் உள்ள சிரமங்கள்

மேற்கு அவுஸ்திரேலியாவில் பொலிஸ் சேவைக்கு விண்ணப்பிக்கும் வெளிநாட்டவர்கள் விசா பெறுவதில் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரியவந்துள்ளது. புதிய ஆட்சேர்ப்பின் கீழ்,...