
இந்தியாவில் மீண்டும் ஒமைக்காரனின் உருமாறிய பிஏ வகை வைரஸ் பரவுவது அதிகரிக்க துவங்கி உள்ளது. ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் உள்ள தொழில் கல்லூரியில் ஒருவருக்கு பிஏ 4 வகை வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், தற்போது பிஏ 5 வகை வைரஸ் மற்றொரு நபருக்கு கண்டறியப்பட்டுள்ளது.

வைரஸ் கண்டறியப்பட்ட நபரிடம் இருந்து மருத்துவ மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. மிக குறுகிய கால இடைவெளியில் ஓமைக்ரானின் உருமாறிய வடிவமான பிஏ வகை வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் சுகாதாரத்துறை எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தி உள்ளது. பிஏ 5 வகை வைரஸ் கண்டறியப்பட்ட இரு நபர்களுக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

இருந்தாலும் மிக குறைந்த அளவிலேயே அறிகுறிகள் காணப்படுவதால் அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட மருத்துவ மாதிரிகள் தொடர் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. பிஏ 5 வகை வைரஸ் இந்தியாவில் குஜராத் மாநிலத்தை தொடர்ந்து தெலுங்கானா மாநிலத்திலும் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களாக நடத்தப்பட்ட ஆர்டி – பிசிஆர் சோதனகைளில் பிஏ4 வகை வைரஸ் பரவ வில்லை என்பது தெரிய வந்துள்ளது. பிஏ5 வகை வைரஸ் இரண்டாவது நபருக்கு பரவி உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

பிஏ 4 மற்றும் பிஏ 5 வகை உருமாறிய வைரஸ்கள் வேகமாக பரவவில்லை என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் ஒமைக்ரானின் உருமாறிய வைரஸ்களின் வகைகள் அதிகரித்து வருவதால் அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.