Newsஇலங்கைக்கு இந்தியாவின் உதவி தொடரும்...பிரதமர் நரேந்திர மோடி உறுதி

இலங்கைக்கு இந்தியாவின் உதவி தொடரும்…பிரதமர் நரேந்திர மோடி உறுதி

-

பல்வேறு வளர்ச்சி திட்டங்களை துவங்கி வைப்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தமிழக மாநில தலைநகர் சென்னைக்கு வந்தார். அவருக்கு ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட சிலப்பதிகாரம் புத்தகத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தமிழக பாரம்பரிய முறைப்படி பிரதமர் நரேந்திர மோடிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

திட்டங்களை துவக்கி வைத்த பிறகு விழாவில் உரையாற்றி பிரதமர் நரேந்திர மோடி, தமிழில் வணக்கம் என கூறி தனது உரையை துவங்கினார். தமிழ் பற்றியும், தமிழர்கள் பற்றியும், இந்தியாவின் வளர்ச்சியில் தமிழர்களின் பங்கு பற்றியும் புகழ்ந்து பேசினார். மகாகவி பாரதியாரின் “செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்ப தேன் வந்து பாயுது காதினிலே” என்ற வரிகளை குறிப்பிட்ட பிரதமர், தமிழர்களின் புகழ் உலகம் முழுவதும் பரவி இருப்பதை பெருமையுடன் கூறினார்.

“தமிழ் மொழி மற்றும் தமிழ் கலாச்சாரத்தை விரிவுபடுத்த இந்திய அரசு கடமைப்பட்டுள்ளது. ஒவ்வொரு துறையிலும் தமிழகத்தை சேர்ந்த யாராவது ஒருவர் தலை சிறந்தவராக விளங்குகிறார். இந்தியா வென்ற 16 பதக்கங்களில் தமிழகத்தை சேர்ந்த 6 பேருக்கு பங்கு உள்ளது. செவித்திறன் குறைபாடுடையோருக்கான ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த 6 பேர் சாதனை படைத்துள்ளனர்.

தேசிய கல்வி கொள்கையில் இந்திய மொழிகளுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படும். நட்பு நாடான இலங்கை நெருக்கடியில் இருந்து மீளவும், பொருளாததார தேக்க நிலையில் இருந்து மீண்டு வரவும் இந்தியா தொடர்ந்து உதவும். இலங்கைக்கு தேவையான உதவிகள் தொடர்ந்து செய்யப்படும். இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்காக ஏராளமான உதவிகளை இந்தியா செய்து வருகிறது” என பிரதமர் நரேந்திர மோடி விழாவில் தெரிவித்தார்.

Latest news

பிரதமர் அல்பானீஸின் 2வது பதவிக்காலத்தில் ஆஸ்திரேலியாவில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும்?

பிரதம மந்திரி அந்தோணி அல்பானீஸ் மற்றும் தொழிலாளர் கட்சி பில்லியன் கணக்கான டாலர்களை உறுதியளித்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார். அதன்படி, எதிர்காலத்தில் பல மாற்றங்கள் ஏற்படும்...

பூமியில் விழ காத்திருக்கும் காஸ்மோஸ் 482 விண்கலம்

வெள்ளி கிரகத்தை ஆய்வு செய்வதற்காக சோவியத் யூனியன் 1972ம் ஆண்டு அனுப்பப்பட்ட காஸ்மோஸ் 482 எனும் விண்கலம் அதிக வெப்பத்தை தாங்கும் அளவுக்கு வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆனால் டைமர்...

ஆஸ்திரேலியர்களின் ஓய்வூதியங்கள் மற்றும் வரிகளில் மாற்றங்கள்

வரும் மாதங்களில் ஆஸ்திரேலியர்களுக்கு பெரிய மாற்றங்கள் ஏற்படும் என்றும், அது நிதியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் தகவல்கள் பரவி வருகின்றன. நிதியாண்டின் முடிவு வேகமாக நெருங்கி...

விக்டோரியாவில் கார் விபத்தில் இருவர் பலி

விக்டோரியாவின் கிப்ஸ்லேண்ட் பிராந்தியத்தின் வடக்கில் நடந்த கார் விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இருவர் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. சாலையில் இருந்த ஒரு தடையில்...

விக்டோரியாவில் கார் விபத்தில் இருவர் பலி

விக்டோரியாவின் கிப்ஸ்லேண்ட் பிராந்தியத்தின் வடக்கில் நடந்த கார் விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இருவர் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. சாலையில் இருந்த ஒரு தடையில்...

ஆஸ்திரேலியாவில் அதிக வெப்பநிலை காரணமாக விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அதிக வெப்பநிலை மற்றும் பலத்த காற்று காரணமாக தெற்கு ஆஸ்திரேலியா மற்றும் விக்டோரியா கடுமையான சூழ்நிலையை எதிர்கொள்கின்றன. இது மே மாத சராசரி வெப்பநிலையை விட 10...