உக்ரைனில் படித்த இந்திய மாணவர்கள் ஹங்கேரியில் படிப்பை தொடர நடவடிக்கை

0
326

உக்ரைனில் படித்து வந்த இந்திய மாணவர்கள் ஹங்கேரியில் படிப்பை தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஹங்கேரி நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெய்சங்கர், உக்ரைனில் மருத்துவம் படித்து வந்த இந்திய மாணவர்கள் தங்களின் படிப்பை தொடரும் விவகாரத்தில் தீர்வு காணும் விதமாக ஹங்கேரி மட்டுமின்றி மற்ற நாடுகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்திய மாணவர்கள் அந்த நாடுகளில் உள்ள பல்கலைக்கழங்களில் படிப்பை தொடர முடியும். இந்திய மாணவர்கள் தங்களின் படிப்பை முடிப்பதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. மற்ற படிப்புக்கள் படிக்கும் மாணவர்களும் தங்களின் படிப்பை தொடர தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

பிஎம் கேர்ஸ் திட்டத்தின் கீழ் 17 ஆதரவற்ற குழந்தைகளுக்கான 1.7 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை துவங்கி வைப்பதற்காக வதோதரா வந்த போது ஜெய்சங்கர் இந்த தகவலை தெரிவித்தார். பிஎம் கேர்ஸ் திட்டத்தின் கீழ் 17 குழந்தைகளின் தபால் நிலைய சேமிப்பு கணக்குகளில் தலா 10 லட்சம் ரூபாய் இந்திய அரசு சார்பில் செலுத்தப்பட்டுள்ளது.

Previous articleகேரளாவில் புதிதாக பரவும் நைல் காய்ச்சல்…ஒருவர் உயிரிழந்ததால் மக்கள் அச்சம்
Next articleகுரங்கம்மை உலகளவில் பரவக்கூடிய நோயாகும் வாய்ப்பு குறைவு