தமிழகத்தில் புதிதாக 2 வகை வைரஸ் பாதிப்பு…12 பேர் பாதிப்பு

0
324

இந்தியாவின் தமிழகத்தில் புதிதாக பிஏ4, பிஏ5 ஆகிய இரண்டு வகையான வைரஸ் பரவத் தொடங்கி உள்ளதாக மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். புதிதாக உருமாற்றம் பெற்றுள்ள வைரஸ் வகைகள் தமிழகத்தில் பரவ தொடங்கி உள்ளன. ஒமைக்காரன் வைரசின் பிரிவுகளான் பிஏ1, பிஏ2, பிஏ3, பிஏ4, பிஏ5 என்ற வகைகளில் இருப்பதாக உலகம் முழுவதும் சொல்லப்படுகிறது.

தமிழகத்தை பொறுத்தவரையில் இதுவரை பிஏ1, பிஏ2 என்கிற அளவில் தான் அந்த வைரஸ் தொற்று தொடர்ந்து கொண்டிருந்தது. இந்நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன், நாகர்கோயிலில் ஒருவருக்கு பிஏ4 என்ற உருமாற்றம் பெற்ற வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 150 மாதிரிகள் சேகரிப்பட்டு ஆய்விற்காக அனுப்பப்பட்டுள்ளது. அந்த பரிசோதனை முடிவுகளின் படி, தற்போது பிஏ4 வகை வைரஸ் தமிழகத்தில் 4 பேருக்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பிஏ5 வகை வைரஸ் பாதிப்பு 8 பேருக்கு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் உருமாற்றம் பெற்ற பிஏ4, பிஏ5 ஆகிய புதிய வைரஸ் தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளதால் மக்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை கட்டாயம் பின்பற்ற வேண்டும். அதோடு நோய் தடுப்பு விதிகள் அனைத்தையும் தவறாமல் பின்பற்ற வேண்டும் என அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Previous articleநடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல்
Next articleஆஸ்திரேலியா சென்ற பயணிக்குக் குரங்கம்மைத் தொற்று உறுதி!