ஆஸ்திரேலியாவின் கண்காணிப்பு விமானத்தைச் சீனப் போர் விமானம் இடைமறித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் தென் சீனக் கடற்பகுதியில் அந்த சம்பவம் நேர்ந்ததாக, ஆஸ்திரேலியாவின் தற்காப்புத் துறை அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
கடந்த மாதம் 26ஆம் திகதியன்று, அனைத்துலக ஆகாயவெளியில் ஆஸ்திரேலிய விமானம் அதன் வழக்கமான கடற்கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது.
அப்போது சீனாவின் J-16 போர் விமானம் இடைமறித்தது என்று ஆஸ்திரேலியத் தற்காப்புத் துறை குறிப்பிட்டது. சீன விமானம், ஆஸ்திரேலிய விமானத்துக்கு மிக அருகே வந்ததால் அது ஆபத்தான நடவடிக்கை என்று அது கூறியது.
சம்பவம் குறித்து அக்கறை தெரிவித்திருப்பதாக, ஆஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள சீனத் தூதரகம் இன்னும் கருத்துரைக்கவில்லை.