Newsஆஸ்திரேலியக் கண்காணிப்பு விமானத்தை இடைமறித்து பரபரப்பை ஏற்படுத்திய சீனப் போர் விமானம்!

ஆஸ்திரேலியக் கண்காணிப்பு விமானத்தை இடைமறித்து பரபரப்பை ஏற்படுத்திய சீனப் போர் விமானம்!

-

ஆஸ்திரேலியாவின் கண்காணிப்பு விமானத்தைச் சீனப் போர் விமானம் இடைமறித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் தென் சீனக் கடற்பகுதியில் அந்த சம்பவம் நேர்ந்ததாக, ஆஸ்திரேலியாவின் தற்காப்புத் துறை அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

கடந்த மாதம் 26ஆம் திகதியன்று, அனைத்துலக ஆகாயவெளியில் ஆஸ்திரேலிய விமானம் அதன் வழக்கமான கடற்கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது.

அப்போது சீனாவின் J-16 போர் விமானம் இடைமறித்தது என்று ஆஸ்திரேலியத் தற்காப்புத் துறை குறிப்பிட்டது. சீன விமானம், ஆஸ்திரேலிய விமானத்துக்கு மிக அருகே வந்ததால் அது ஆபத்தான நடவடிக்கை என்று அது கூறியது.

சம்பவம் குறித்து அக்கறை தெரிவித்திருப்பதாக, ஆஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள சீனத் தூதரகம் இன்னும் கருத்துரைக்கவில்லை.

Latest news

Platelets-இன் ஆயுளை நீட்டிக்க ஆஸ்திரேலியா புதிய முறை

உயிர்காக்கும் இரத்தத் தட்டுக்கள் உறைந்த நிலையில் இருந்தாலும் பயனுள்ளதாக இருக்கும் என்று ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது. குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்திரேலிய செஞ்சிலுவைச் சங்க உயிர்காக்கும் அமைப்பு ஆகியவற்றுக்கு...

யுனெஸ்கோவின் கலாசார பாரம்பரிய பட்டியலில் இணைக்கப்பட்ட பண்டிகை

யுனெஸ்கோவின் கலாசார பாரம்பரிய பட்டியலில் இந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளிப் பண்டிகை நேற்று (10) உத்தியோகபூர்வமாக இணைக்கப்பட்டுள்ளது. டெல்லி செங்கோட்டையில் நடைபெற்று வரும் யுனெஸ்கோவின் கலாசார பாரம்பரியக்...

பூமியை விரைவாக நெருங்கும் வால் நட்சத்திரத்தின் சமீபத்திய படங்கள்

விரைவில் பூமியை நெருங்கவிருக்கும் ஒரு interstellar வால் நட்சத்திரத்தின் புதிய புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவை ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி மற்றும் Jupiter Icy Moons Explorer ஆகியவற்றால்...

குழந்தைகளில் பல் சிதைவின் ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறிய ஒரு புதிய வழி

இளம் குழந்தைகளில் பல் சிதைவின் ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறிவதில் பல் மருத்துவத்திற்கு சவால் விடும் வகையில் AI தொழில்நுட்பம் செயல்பட்டு வருகிறது. மின்சார பல் துலக்குதலைப் போல...

Westpac சேவை நிறுத்தம் – ஆயிரக்கணக்கானோருக்கு சேவை சிக்கல்கள்

ஆஸ்திரேலியாவின் முக்கிய வங்கிகளில் ஒன்றானWestpac-ல் ஏற்பட்ட செயலிழப்பு காரணமாக வாடிக்கையாளர்கள் ஆன்லைன் வங்கி மற்றும் EFTPOS ஐ அணுக முடியவில்லை. பிரச்சனை என்ன என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க இலங்கை சென்ற ஆஸ்திரேலிய அமைச்சர்

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு ஆதரவைத் தெரிவிக்க ஆஸ்திரேலியாவின் சர்வதேச கல்வி மற்றும் குடியுரிமை, சுங்கம் மற்றும் பன்முக கலாச்சார விவகாரங்களுக்கான உதவி அமைச்சர் ஜூலியன்...