Newsஇந்தோனேசியப் பயணம் தொடர்பில் ஆஸ்திரேலியப் பிரதமர் வெளியிட்ட முக்கிய தகவல்!

இந்தோனேசியப் பயணம் தொடர்பில் ஆஸ்திரேலியப் பிரதமர் வெளியிட்ட முக்கிய தகவல்!

-

ஆஸ்திரேலியப் பிரதமர் ஆன்டனி ஆல்பனீசி (Anthony Albanese), தமது இந்தோனேசியப் பயணம் இருதரப்பு உறவின் முக்கியத்துவத்தைக் காட்டுவதாகக் கூறியிருக்கிறார்.

புதிய பிரதமராகப் பதவியேற்ற 2 வாரங்களுக்குப் பிறகு அவர் இந்தோனேசியாவுக்குப் பயணம் மேற்கொள்கிறார்.

தென்கிழக்காசியாவில் தமது அரசாங்கம் அதிக கவனம் செலுத்தவிருப்பதாகத் திரு. ஆல்பனீசி தெரிவித்தார்.

ஆஸ்திரேலியப் பிரதமர் ஜக்கர்த்தாவில் இந்தோனேசிய அதிபர் ஜோக்கோ விடோடோவுடன் (Joko Widodo) பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திரு. ஆல்பனீசி, ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் Penny Wong, வர்த்தக அமைச்சர் Don Farrell ஆகியோர் இந்தோனேசியாவுக்குச் செல்கின்றனர்.

ஆஸ்திரேலியாவின் தொழிற்கட்சி, ஆட்சியைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, திரு. ஆல்பனீசி மேற்கொள்ளும் இரண்டாவது பயணம் இது.

கடந்த மாதம் Quad நாடுகளுக்கு இடையே நடந்த சந்திப்பில் கலந்துகொள்ள அவர் தோக்கியோ சென்றிருந்தார்.

Latest news

இதய அறுவை சிகிச்சைக்குப் பிறகு தொற்றுகள் ஏற்படும் அபாயம்

இதய அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் ஐந்து பெரியவர்களில் ஒருவருக்கு ஆறு மாதங்களுக்குள் தொற்று ஏற்படும் என்று ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. மிச்சிகன் மருத்துவப் பல்கலைக்கழகம்...

உலகை விமானத்தில் சுற்றி வந்த இளைய ஆஸ்திரேலிய மனிதர்

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு இளம் விமானி, உலகம் முழுவதும் விமானத்தில் பறந்த இளைய நபராக மாறத் தயாராகி வருகிறார். பிரிஸ்பேனைச் சேர்ந்த 15 வயது Byron Waller...

ஆஸ்திரேலிய மாநிலத்தில் ஆம்புலன்ஸ்கள் தொடர்பில் அழுந்துள்ள பிரச்சனை

தெற்கு ஆஸ்திரேலியாவில் ஆம்புலன்ஸ் நெரிசல் இதுவரை இல்லாத அளவுக்கு உச்சத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. தெற்கு ஆஸ்திரேலியா ஜூலை மாதத்தில் 5,866 Ambulance Ramping மணிநேரங்களைப் பதிவு செய்துள்ளது....

முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்ட Microbat இனங்கள்

நியூ சவுத் வேல்ஸின் Illawarra தாழ்நில காடுகளில் முதன்முறையாக ஒரு அச்சுறுத்தலுக்கு உள்ளான நுண்ணுயிரி வௌவால் இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மாறுபாடு நியூ சவுத் வேல்ஸில் உள்ள...

விக்டோரியர்களுக்கு ஒரு சுய பாதுகாப்பு சட்டம்!

விக்டோரியாவின் தற்காப்புச் சட்டங்களில் திருத்தம் கொண்டுவர Libertarian MP ஒருவர் அழைப்பு விடுக்கிறார். மாநிலம் முழுவதும் வன்முறை வீடு படையெடுப்புகள் அதிகரித்து வரும் நிலையில் இது வருகிறது. விக்டோரியா...

 இப்போது கடைகளில் கிடைக்கும் மனித உருவ ரோபோக்கள்

பெய்ஜிங்கில் ஒரு புதிய ரோபோ கடை திறக்கப்பட்டுள்ளது. அதில் இயந்திர சமையல்காரர்கள் முதல் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் உயிருள்ள பிரதிகள் வரை அனைத்தும் விற்கப்படுகின்றன. சீன தலைநகரில் வெள்ளிக்கிழமை...