Newsஇளவேனில் சஞ்சிகைக்கு ஆக்கங்களை அனுப்ப சந்தர்ப்பம்!

இளவேனில் சஞ்சிகைக்கு ஆக்கங்களை அனுப்ப சந்தர்ப்பம்!

-

இளவேனில் சஞ்சிகை – ஆக்கங்கள்
கேசி தமிழ் மன்றத்தின் ‘இளவேனில்’ சஞ்சிகையின் அடுத்த இதழ் ‘ஆடிப்பிறப்பு 2022’ வெளியீடாக வருகின்ற ஜூலை மாதம் வெளிவர இருக்கின்றது. சிறுவர்களை தமிழில் எழுத ஊக்குவிப்பது மற்றும் வளர்ந்துவரும் கலை இலக்கிய படைப்பாளிகளுக்கு களம் அமைத்து கொடுத்தல் என்பவையே, இச்சஞ்சிகையை வெளியிட எம்மை தூண்டிய முக்கியமான காரணிகள் ஆகும்.
இளவேனில் சஞ்சிகைக்கான ஆக்கங்களை இங்கு வாழும் சிறுவர்கள், இளைய தலைமுறை எழுத்தாளர்கள் உட்பட்ட ஆக்க இலக்கிய படைப்பாளிகளிடம் இருந்து எதிர்பார்க்கின்றோம்.

ஆக்கங்கள்

சிறுகதை, கவிதை, இலக்கியம்-மருத்துவம்-தொழில்நுட்பம் உட்பட்ட பல்துறை சார் கட்டுரைகள் மற்றும் பயனுள்ள குறிப்புகள் போன்ற எவ்வடிவத்திலேயும் அமையலாம்.

மற்றையவர்களின் நியாயமான உணர்வுகளை புண்படுத்தாத வகையில் அமைவதை விரும்புகின்றோம்.

தட்டச்சு செய்யப்படின் ஆகக் கூடியது இரண்டு A4 பக்கங்களுக்குள் அல்லது கையால் எழுதப்படின் ஆகக் கூடியது நான்கு A4 பக்கங்களுக்குள் அமைவதை எதிர்பார்க்கின்றோம்.

30/06/2022 ஆம் திகதிக்கு முன்பாக எம்மை வந்தடைய வேண்டும்.
அனுப்பவேண்டிய முகவரி: editor@caseytamilmanram.org.au

Latest news

சூடான வாக்குவாதங்களால் சூடுபிடித்த நாடாளுமன்றம்

பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே நாடாளுமன்றத்தில் கடுமையான வார்த்தை மோதல் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸ் ஹாக் பிரதமரை "நம்பிக்கையற்ற...

ட்ரம்ப் நிர்வாகத்தில் 80,000 விசாக்கள் இரத்து

அமெரிக்காவில் பெருந்தொகையான குடியேற்ற விசாக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், பலர் நாடு கடத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகாரங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கடுமையான...

விமானத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு

British Airways விமானத்தில் 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இந்தியருக்கு 21 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 14 ஆம் திகதி...

ஆஸ்திரேலியர்களிடம் மன்னிப்பு கேட்ட Microsoft

Microsoft தனது சந்தா திட்டத்தில் (subscription plan) ஏற்பட்ட விலை நிர்ணய பிரச்சினைக்காக ஆஸ்திரேலிய வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளது. இதற்கிடையில், ஆஸ்திரேலிய போட்டி மற்றும் நுகர்வோர் ஆணையம்...

மனைவியைப் பார்க்க போலீஸ் ஹெலிகாப்டரைப் பயன்படுத்திய விக்டோரியா போலீஸ் கமிஷனர்

விக்டோரியாவின் தலைமை காவல்துறை ஆணையர் மைக் புஷ், தனிப்பட்ட பயன்பாட்டிற்காக போலீஸ் ஹெலிகாப்டரைப் பயன்படுத்தியதற்காக விமர்சிக்கப்பட்டார். ஜூலை 29 ஆம் திகதி ஒரு போராட்டத்திற்கும், மற்றொரு முறை...

ஆஸ்திரேலியாவில் சட்டவிரோத சிகரெட் விற்பனை 6.6 பில்லியன் டாலர்களாக அதிகரிப்பு

ஆஸ்திரேலியாவில் சட்டவிரோத சிகரெட் விற்பனை வியத்தகு அளவில் அதிகரித்துள்ளது. 2022 ஆம் ஆண்டு முதல் சட்டவிரோத சிகரெட் சந்தை இரட்டிப்பாகியுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் அவற்றின் விலையில் ஏற்பட்டுள்ள...