News இளவேனில் சஞ்சிகைக்கு ஆக்கங்களை அனுப்ப சந்தர்ப்பம்!

இளவேனில் சஞ்சிகைக்கு ஆக்கங்களை அனுப்ப சந்தர்ப்பம்!

-

இளவேனில் சஞ்சிகை – ஆக்கங்கள்
கேசி தமிழ் மன்றத்தின் ‘இளவேனில்’ சஞ்சிகையின் அடுத்த இதழ் ‘ஆடிப்பிறப்பு 2022’ வெளியீடாக வருகின்ற ஜூலை மாதம் வெளிவர இருக்கின்றது. சிறுவர்களை தமிழில் எழுத ஊக்குவிப்பது மற்றும் வளர்ந்துவரும் கலை இலக்கிய படைப்பாளிகளுக்கு களம் அமைத்து கொடுத்தல் என்பவையே, இச்சஞ்சிகையை வெளியிட எம்மை தூண்டிய முக்கியமான காரணிகள் ஆகும்.
இளவேனில் சஞ்சிகைக்கான ஆக்கங்களை இங்கு வாழும் சிறுவர்கள், இளைய தலைமுறை எழுத்தாளர்கள் உட்பட்ட ஆக்க இலக்கிய படைப்பாளிகளிடம் இருந்து எதிர்பார்க்கின்றோம்.

ஆக்கங்கள்

சிறுகதை, கவிதை, இலக்கியம்-மருத்துவம்-தொழில்நுட்பம் உட்பட்ட பல்துறை சார் கட்டுரைகள் மற்றும் பயனுள்ள குறிப்புகள் போன்ற எவ்வடிவத்திலேயும் அமையலாம்.

மற்றையவர்களின் நியாயமான உணர்வுகளை புண்படுத்தாத வகையில் அமைவதை விரும்புகின்றோம்.

தட்டச்சு செய்யப்படின் ஆகக் கூடியது இரண்டு A4 பக்கங்களுக்குள் அல்லது கையால் எழுதப்படின் ஆகக் கூடியது நான்கு A4 பக்கங்களுக்குள் அமைவதை எதிர்பார்க்கின்றோம்.

30/06/2022 ஆம் திகதிக்கு முன்பாக எம்மை வந்தடைய வேண்டும்.
அனுப்பவேண்டிய முகவரி: editor@caseytamilmanram.org.au

Latest news

நாளை வேலை நிறுத்தம் செய்யவிருக்கும் 200 குவாண்டாஸ் விமானிகள்

சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை அடுத்த 24 மணி நேரத்தில் நிறைவேற்றாவிட்டால், அடுத்தகட்ட தொழில்துறை நடவடிக்கை எடுக்கப்படும் என குவாண்டாஸ் விமானிகள் தெரிவித்துள்ளனர்.

4வது மாதத்திற்கான வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை

இன்று நடைபெற்ற பெடரல் ரிசர்வ் வங்கியின் நிர்வாகக் குழு கூட்டத்தில் வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. அதன்படி, ரொக்க...

தொழிற்பயிற்சி கல்விக்கு $37.8 மில்லியன் கூடுதல் ஒதுக்கீடு

தொழிற்பயிற்சி கல்வி மேம்பாட்டிற்காக கூடுதலாக 37.8 மில்லியன் டாலர்களை ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. செய்தியாளர்களிடம்...

Yes23 பிரச்சாரத்திற்கு ஒரு எச்சரிக்கை

வாக்கெடுப்பில் முன்மொழிவுக்கு ஆதரவாக செயல்படும் Yes23 பிரச்சாரத்திற்கு தேசிய தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, தேர்தல் ஆணையத்தின்...

கிழக்கு விக்டோரியாவில் அபாய நிலையில் உள்ள காட்டுத் தீ

கிழக்கு விக்டோரியாவின் பல பகுதிகளில் காட்டுத்தீ அபாயகரமான நிலையை எட்டியுள்ளது. பல புறநகர் பகுதிகளில் உள்ள மக்களை விரைவில்...

போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு இளைஞர் சமூகத்திற்கு இல்லை என தெரியவந்துள்ளது

அவர்கள் பயன்படுத்தும் போதைப்பொருள் தொடர்பில் இந்த நாட்டில் இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு இல்லை என கணக்கெடுப்பு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.