News நிலநடுக்கத்தில் சிக்கியவர்களை கண்டறியும் எலி

நிலநடுக்கத்தில் சிக்கியவர்களை கண்டறியும் எலி

-

தினசரி வளர்ந்து வரும் அறிவியல் முன்னேற்றத்தில் நிலநடுக்கத்தில் சிக்கியவர்களை பயிற்சி அளிக்கப்பட்ட எலிகள் மூலம் மீட்கும் சோதனையை ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டுள்ளனர்..

இந்தப் புதுமையான முயற்சியில் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த டாக்டர் டோன்னா கீன் இறங்கியுள்ளார். இந்த சோதனையின் போது சிறிய அளவிலான எலிகள் கட்டட இடிபாடுகளுக்குள் ஒரு சிறிய அளவிலான முதுகுப் பையுடன் (பேக்) அனுப்பப்படுகிறது. இந்த சிறிய முதுகுப் பையில் ஒலிவாங்கி (மைக்) ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஒலிவாங்கியின் உதவியால் இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பவர்களிடம் நம்மால் பேச இயலும்.

இதுவரை 7 எலிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த எலிகளுக்கு வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதுகுப் பைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சோதனை முயற்சியாக இந்த எலிகள் செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட இடிபாடுகளுக்குள் அனுப்பப்பட்டு சோதிக்கப்பட்டது. ஒலி வாங்கி மட்டுமில்லாது சில உணரிகள் (சென்சார்ஸ்) கூட பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் உண்மையில் நிலநடுக்கம் ஏற்படும் போது இந்த உணரிகள் பெரிதும் உதவியாக இருக்கும்.

இது குறித்து டாக்டர் டோன்னா கீன் கூறியதாவது, “ எலிகள் சுத்தமற்றவை என்பது நமது தவறான புரிதல். எலிகள் மனிதர்களுடன் எளிதில் பழகும் திறன் கொண்டவை. எலிகளால் இடிபாடுகளுக்குள் சுலபமாக செல்ல முடியும். நாங்கள் சோதனை முயற்சியை செய்து முடித்துள்ளோம். இருப்பினும், இந்த பயிற்சி பெற்ற எலிகள் உண்மையான நிலநடுக்க இடிபாடுகளுக்குள் அனுப்பி இன்னும் சோதிக்கப்படவில்லை. இடிபாடுகளுக்குள் செல்லும் எலியின் முதுகுப் பையில் உள்ள ஒலி வாங்கியின் உதவியால் எங்களால் இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பவர்களிடம் பேச முடியும்” என்றார்.

170 எலிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு அவை நிலநடுக்கம் அடிக்கடி ஏற்படும் நாடான துருக்கிக்கு அனுப்பப்பட உள்ளதாக டாக்டர் டோன்னா தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Latest news

சிட்னி அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு பெண் சடலமாக மீட்பு – விசாரணைகள் ஆரம்பம்

மேற்கு சிட்னி அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு பெண்ணின் சடலத்தை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு காரணம் குடும்ப தகராறு என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விக்டோரியா அரசு ஊழியர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு இரட்டிப்பு

விக்டோரியாவில் பொதுத்துறை ஊழியர்களுக்கான வருடாந்திர ஊதிய உயர்வு இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது வருடத்திற்கு 1.5 வீத சம்பள அதிகரிப்புக்கு...

YouTube-இல் அதிரடி மாற்றம்! இனி இந்த வசதியை பயன்படுத்த முடியாது

யூடியூபில் ஸ்டோரீஸ் என்ற வசதி நீக்கப்பட உள்ளதாக, கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.கூகுள் நிறுவனத்தில் பிரபலமான செயலியாக அறியப்பட்டும் யூடியூப்பில், ஸ்டோரீஸ் என்ற வசதி...

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இலங்கையர் என்ற பெருமையை பெற்ற ஈழத் தமிழர்

இலங்கையில் பிறந்து இங்கிலாந்தில் புலம்பெயர்ந்து வாழும் 46 வயதான விவேகானந்தன் துஷியந்தன் , முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் நினைவேந்தலை 8849 மீற்றர் உயரமான...

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இலங்கையர் என்ற பெருமையை பெற்ற ஈழத் தமிழர்

இலங்கையில் பிறந்து இங்கிலாந்தில் புலம்பெயர்ந்து வாழும் 46 வயதான விவேகானந்தன் துஷியந்தன் , முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் நினைவேந்தலை 8849 மீற்றர் உயரமான...

பெர்த் மருத்துவர்களுக்கு ChatGPT தடை

AI அல்லது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு பெர்த் நகரத்தில் உள்ள மருத்துவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நோயாளிகளின் தனிப்பட்ட...