Newsமுதல் முறையாக நேரில் சந்தித்துக் கொண்ட சீன-ஆஸ்திரேலிய அமைச்சர்கள்!

முதல் முறையாக நேரில் சந்தித்துக் கொண்ட சீன-ஆஸ்திரேலிய அமைச்சர்கள்!

-

ஆஸ்திரேலிய, சீனத் தற்காப்பு அமைச்சர்கள் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக சிங்கப்பூரில் சந்தித்து பேச்சு நடத்தினர். இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மோசமடைந்துள்ள நிலையில் இந்தச் சந்திப்பு முக்கிய முன் னேற்றப்படி என வருணிக்கப் படுகிறது.

“வெளிப்படையான முழுமையான கருத்து பரிமாற்றத்திற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது. ஆஸ்திரேலியாவின் அக்கறைக்குரிய பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி யிருந்தேன்,” என்று ஆஸ்திரேலிய தற்காப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்ல்ஸ் தெரிவித்தார்.

இருதரப்புக்கும் இடையே நடை பெற்ற சந்திப்பை அவர் நேற்று செய்தியாளர்களிடம் உறுதிப்படுத்தினார்.

சிங்கப்பூரில் நடைபெறும் ஷங்ரிலா மாநாட்டையொட்டி மார்ல்சும் சீன தற்காப்பு அமைச்சர் வெய் ஃபெங்கியும் சந்தித்தனர். சுமார் ஒரு மணி நேரம் அவர்கள் கலந்துரையாடினர். தற்போதையக் காலக்கட்டத்தில் வெளிப்படையாக உரையாடுவது முக்கியம் என்று துணைப் பிரதமரு மான திரு மார்ல்ஸ் குறிப்பிட்டார்.

“ஆஸ்திரேலியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவு சிக்கலானது. அதற்கு நேரில் சந்தித்து பேசுவதே நல்லது” என்றும் அவர் சொன்னார். ஆனால் இந்தச் சந்திப்பு பற்றி சீன அரசாங்கமோ ஜெனரல் வெய்யோ உடனடியாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

கொவிட்-19 கிருமி உருவான இடத்தைக் கண்டுபிடிக்க தன்னிச் சையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் ஸ்காட் மோரிசன் வலியுறுத்தினார்.

இது, சீனாவுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. ஆஸ்திரேலியாவில் ‘5ஜி’ கட்டமைப்பை உருவாக்க சீனாவின் தொலைத்தொடர்பு நிறுவனமான ஹுவாவெய்யுக்கு தடை விதிக்கப் பட்டது. இதனால் இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மேலும் மோசம் அடைந்தது.

Latest news

வெனிசுலாவில் பெப்ரவரி 3 ஆம் திகதி வரை இலவச இணையசேவை

வெனிசுலாவில் ஏற்பட்டுள்ள அதிரடி அரசியல் மாற்றங்களுக்கு மத்தியில், அந்நாட்டு மக்களுக்கு இலவச இணைய சேவையை வழங்குவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்க...

மின்சார வாகன சந்தையில் தனது கிரீடத்தை இழக்கும் Tesla

பல ஆண்டுகளாக உலகின் முன்னணி மின்சார வாகன உற்பத்தியாளராக இருந்த எலான் மஸ்க்கின் Tesla, தனது இடத்தை இழந்துள்ளது. 2025 ஆம் ஆண்டில் சாதனை விற்பனையை எட்டிய...

வெனிசுலா மீதான டிரம்பின் தாக்குதல்கள் குறித்து உலகத் தலைவர்கள் கூறுவது என்ன?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவையும் அவரது மனைவி சிலியா புளோரஸையும் கைது செய்த பிறகு உலகத் தலைவர்கள் வெவ்வேறு வழிகளில்...

குழந்தைகளைப் பாதுகாக்க குயின்ஸ்லாந்து அரசின் புதிய சட்டம்

குயின்ஸ்லாந்துவாசிகள் மற்றும் அவர்களது குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்துடன், 'டேனியல் சட்டத்தின்' (Daniel’s Law) கீழ், தண்டனை பெற்ற குழந்தை பாலியல் குற்றவாளிகள் பற்றிய...

திருமணம் செய்தார் பெர்த் கால்பந்து சூப்பர் ஸ்டார்

பெர்த் கால்பந்து சூப்பர் ஸ்டார் சாம் கெர் மற்றும் அவரது புதிய மனைவி கிறிஸ்டி மெவிஸ் ஆகியோர் தங்கள் திருமணத்தின் முதல் அதிகாரப்பூர்வ புகைப்படங்களை சமூக...

மின்சார வாகன சந்தையில் தனது கிரீடத்தை இழக்கும் Tesla

பல ஆண்டுகளாக உலகின் முன்னணி மின்சார வாகன உற்பத்தியாளராக இருந்த எலான் மஸ்க்கின் Tesla, தனது இடத்தை இழந்துள்ளது. 2025 ஆம் ஆண்டில் சாதனை விற்பனையை எட்டிய...