கொரோனா பெரும் தொற்றால் 2022 ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் 15,000 பேர் வரை உயிரிழக்க நேரிடலாம் என மருத்துவத்துறை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். அதே சமயம் நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதற்கு மேலும் அதிகரிக்கலாம் என கூறுகின்றனர்.
தற்போது நாட்டில் செலுத்தப்பட்டு வரும் தடுப்பூசிகரின் அளவு போதுமானதாக இல்லை. அதனால் அவற்றை அதிகரிக்க வேண்டும் என Burnet Institute பேராசிரியர் மார்க்கரெட் ஹெல்லர்ட் விக்டோரியா மற்றும் பெடரல் அரசுகளுக்கு அறிவுரை வழங்கி உள்ளார். தனது கணிப்பின்படி நாட்டில் நடப்பு ஆண்டில் 10,000 முதல் 15,000 வரை உயிரிழக்க நேரிடலாம் என்றும் எச்சரித்துள்ளார்.
ஆஸ்திரேயாவில் நோய் பரவலை 20 சதவீதம் குறைத்தாலே 2000 பேரின் உயிர்கள் காப்பாற்றப்படலாம். கொரோனா பரவல் மற்றும் உயிரிழப்புக்களை தடுக்க முகக்கவசம் அணிவதை மீண்டும் அறிமுகம் செய்தல், காற்றின் தரத்தை மேம்படுத்துதல், தடுப்பூசிகளின் எண்ணிக்கையை அதிகரித்தல், வைரஸ் பரிசோதனைகள் மற்றும் தனிமைப்படுத்தலை கண்காணித்தல் ஆகியவையே கொரோனா பரவலை தடுக்க முடியும் என்றும் மார்கரெட் எச்சரித்துள்ளார்.
பேராசிரியர் Jodie McVernon தனது அறிக்கையில், ஆஸ்திரேலியாவில் போதிய அளவிற்கு தடுப்பூசிகளை கையிருப்பு வைக்காவிட்டால் அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பா போன்று ஆஸ்திரேலியாவிலும் திடீரென கொரோனா பரவல் வேகமெடுத்து, அதிக உயிரிழப்புக்கள் ஏற்படும் அபாய நிலை உருவாகலாம் என எச்சரித்துள்ளார்.