ஆஸ்திரேலியாவில் 95 ஆயிரத்து 404 பேர் தங்களைத் தமிழர்களாக அல்லது தமிழ்மொழி பேசுபவர்களாக அடையாளப்படுத்தியுள்ளார்கள்.
ஆஸ்திரேலியாவில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட குடிசன மதிப்பீட்டின்படி இந்த தகவல் வெளியாகியுள்ளது.
இவர்களில் 88 ஆயிரத்து 21 பேர் நன்றாக அல்லது மிக நன்றாகத் தமிழ் பேசக்கூடியவர்கள் என்றும் 6351 பேர் சுமாராகத் தமிழ் பேசக்கூடியவர்கள் என்றும் தங்களை அடையாளப்படுத்தியிருக்கிறார்கள்.
1033 தமிழர்கள் தங்களது மொழி பற்றி எதுவும் கூறவில்லை. இதுவேளை, 85 ஆயிரத்து 869 பேர் தாங்கள் சிங்கள மொழி பேசுபவர்கள் என்று தங்களை அடையாளப்படுத்தியுள்ளார்கள்.
இவர்களில் 81 ஆயிரத்து 207 பேர் தங்களை நன்றாக சிங்கள மொழி பேசுபவர்கள் என்றும் 3 ஆயிரத்து 976 பேர் சுமாராகப் பேசக்கூடியவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள். 684 சிங்களவர்கள் தங்களது மொழி பற்றிக் குறிப்பிடவில்லை.