News சீன ஊடகங்களின் கடும் தாக்குதல் - உச்சக்கட்ட கோபத்தில் ஆஸ்திரேலிய பிரதமர்

சீன ஊடகங்களின் கடும் தாக்குதல் – உச்சக்கட்ட கோபத்தில் ஆஸ்திரேலிய பிரதமர்

-

சீன ஊடகங்கள் கடும் தாக்குதலை முன்னெடுத்துள்ளமையினால் ஆஸ்திரேலிய பிரதமர் கடும் கோமடைந்துள்ளார்.

ஆஸ்திரேலிய பிரதமர் அறியாமையில் உள்ளார் எனவும் சீனாவும் அவுஸ்திரேலியாவும் தங்கள் உறவுகளை சீர்செய்வதற்கான வாய்ப்புகள் குறைவடைகின்றன எனவும் சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சில நாட்களிற்கு முன்னர் ஆஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பெனிஸ் உக்ரைன் மீதான ரஷ்யாவின் நடவடிக்கையை சீனா தாய்வான் பதற்றத்துடன் ஒப்பிட்டு கருத்து வெளியிட்டிருந்தார்.

உக்ரைனை கைப்பற்றும் விடயத்தில் விளாடிமிர் புட்டின் தோல்வியடைந்துள்ளமை இறைமை உள்ள நாட்டின் மீது படைபலத்தை பயன்படுத்தி மாற்றங்களை ஏற்படுத்தும் முயற்சிகள் எதிர்ப்பை சந்திக்கும் என்பதை இது புலப்படுத்தியுள்ளது எனவும் ஆஸ்திரேலிய பிரதமர் தெரிவித்திருந்தார்.

ஆஸ்திரேலிய பிரதமரின் இந்த கருத்தினை கடுமையாக விமர்சித்துள்ள சீனா டெய்லி அவுஸ்திரேலிய பிரதமரின் கருத்து இராஜதந்திர அணுகுமுறைகள் அரசியல் யதார்த்தங்கள் மீதான அவரது திறமையின்மையை வெளிப்படுத்தியுள்ளது என குறிப்பிட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமர் உக்ரைன் குறித்த சீனாவின் நிலைப்பாட்டை அறியாத அளவிற்கு தவறான தகவல்களை கொண்டவர் என்பதை நம்புவது கடினம் எனவும் குறிப்பிட்டுள்ள சீனாவின் நாளிதழ் சீனா தனது நிலைப்பாட்டை பல தடவை வெளிப்படுத்தியுள்ளது தாய்வானின் நிலையை அறியாத அளவிற்கு அவர் அறியாதவராகயிருக்கலாம் என ஆசிரிய தலையங்களித்தில் அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது.

தொழிற்கட்சி சீனாவை கட்டுப்படுத்தும் அமெரிக்காவின் கொள்கையை பறைசாற்றிக்கொண்டு அதன் அணியில் ஆர்வத்துடன் இணைந்துள்ளது என சீன நாளிதழ் தெரிவித்துள்ளது.

உக்ரைனில் ரஷ்யாவின் மூலோபாய தவறுகளில் இருந்து சீனா பாடம் கற்கவேண்டும் என தெரிவித்துள்ளதை தொடர்ந்து சீனாவின் வெளிவிவகார பேச்சாளரும் அவுஸ்திரேலிய பிரதமரை கடுமையாக சாடியுள்ளார்.

இது பொறுப்பற்ற கருத்து உக்ரைன் விவகாரம் தொடர்பில் எங்களின் நிலைப்பாட்டை மீண்டும் மீண்டும் தெரிவித்துவந்துள்ளோம்,தாய்வான் உக்ரைனில்லை ஒப்பிடமுடியாது என சீனாவின் வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Latest news

ஆஸ்திரேலியாவில் 2014ஆம் ஆண்டின் பின்னர் பதிவாகிய உயர் ஊதிய வளர்ச்சி

ஆஸ்திரேலியாவில் ஜூன் மாதம் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில், ஊதிய வளர்ச்சி விகிதம் 0.7 சதவீதமாக பதிவாகியுள்ளது.

குரங்கு அம்மை அச்சம் – குரங்குகளை கொல்லும் மக்கள்

குரங்கு அம்மை நோய்க்கு புதிய பெயர் வைக்க உலக சுகாதார மையம் முடிவு செய்துள்ளது. ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட...

மலையாள சினிமா சூப்பர் ஸ்டார் இலங்கை வருகை – சனத் ஜயசூரியவுடன் சந்திப்பு

இந்திய மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் மம்முட்டி, அந்நாட்டில் ஒரு படத்தின் படப்பிடிப்பிற்காகநேற்று மாலை இலங்கை வந்துள்ளார்.

புலம்பெயர்ந்தோருக்காக இலங்கையில் அலுவலகம் திறக்கும் ஜனாதிபதி ரணில்!

இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வசிப்போரின் உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கான விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

ஆஸ்திரேலியாவில் உயர் விருது வென்ற இலங்கை மாணவி – பரிசு தொகையில் உதவி செய்ய திட்டம்

ஆஸ்திரேலியாவில் உள்ள உயர் பல்கலைக்கழகங்களில் ஒன்றில் இலங்கை மாணவி அதி உயர் விருதை பெற்றுள்ளார்.

சீன அதிகாரிகளின் செயலால் அலறியடித்து ஓடிய மக்கள்

சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள பிரலாபமான ஐகியா ஷோரூமில் கொரோனா கட்டுப்பாட்டிலிருந்து தப்பிக்க மக்கள் அலறியடித்து ஓடும் வீடியோ இணையத்தில் பெருமளவு பகிரப்பட்டு...