கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) ஆஸ்திரேலியப் பிரதமரின் பெயரை மறந்துவிட்டதாக தெரியவந்துள்ளது.
இரு தலைவர்களும் ஸ்பெயின் தலைநகர் மட்ரிடில் நடைபெறும் நேட்டோ உச்சநிலை மாநாட்டில் சந்தித்துக்கொண்டனர். சந்திப்பதி போது மிக்க மகிழ்ச்சி என்று கூறிய ட்ரூடோ பிரதமர் ஆண்டனி அல்பனீசியின் பெயரைக் கூறவில்லை.
அவரின் பெயரைச் சொல்ல வேண்டிய இடத்தில் “ஆஹ்… ஆஹ்… ஆஹ்” என்று ட்ரூடோ திக்கினார்.
பின் “சிறந்த, முற்போக்கான தலைவரைச் சந்தித்ததில் மகிழ்ச்சி” என்று அவர் சொல்லி முடித்ததாக செய்தி வெளியாகியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் ஒரு நண்பர் இருப்பதில் மகிழ்ச்சி என்றும் பிரதமர் அல்பனீசி பருவநிலை மாற்றம், அனைவரையும் ஒன்றடக்கிய பொருளியல் வளர்ச்சி ஆகிய பலவற்றைக் கையாளப் போவதாகவும் பிரதமர் ட்ரூடோ தெரிவித்தார்.