இலங்கையில் இருந்து து கடந்த மூன்று மாதங்களில் சட்டவிரோதமாக ஆஸ்திரேலியாவிற்கு வர முயன்ற 506 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
ஆழ்கடல் பகுதியில் வைத்து 433 பேரையும், கரையோர பகுதிகளில் 5 தடவையில் 73 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஈஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமான முறையில் பயணிக்க பயன்படுத்திய 8 படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதேவேளை, கடற்படையினரின் கட்டுப்பாட்டை மீறி சட்டவிரோதமாக படகு மூலம் ஆஸ்திரேலிய கடற்பரப்பிற்குள் பிரவேசித்த 91 பேர் கொண்ட குழு, ஆஸ்திரேலிய கடலோர காவல்படையினரால் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.