புதிய படத்திற்கு சம்பளத்தை அதிரடியாக உயர்த்திய நயன்தாரா

0
117

நயன்தாரா நடிக்கும் பெரும்பாலான படங்கள் ஹிட்டாகுவதால் அவரை தங்களது படங்களில் புக் செய்வதற்கு தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை நயன்தாரா தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக கோலிவுட்டில் பேசப்படுகிறது. தென்னிந்திய சினிமாவில் கடந்த 20ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக நயன்தாரா வலம் வந்து கொண்டிருக்கிறார். பாலிவுட்டில் ஷாரூக்கானுக்கு ஜோடியாக ஜவான் என்ற படத்தில் நயன்தாரா நடிக்கிறார். ஜவான் படத்திற்காக ரூ. 7கோடி வரை நயன்தாரா சம்பளமாக பெற்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையில் நயன்தாராவின் 75வது படம் பற்றிய அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. கதாநாயகியை மையப்படுத்தி தமிழில் உருவாகவுள்ள இந்த படத்தில் நயன்தாரா நடிக்கிறார். இந்த படத்திற்கு ரூ. 10 கோடி வரை சம்பளம் நயன்தாராவுக்கு பேசப்பட்டதாகவும், இதனை அளிப்பதற்கு தயாரிப்பாளர் தரப்பில் சம்மதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கு பிறகு, கணவர் விக்னேஷ் சிவன், அஜித்குமாரை வைத்து இயக்க உள்ள ஏகே 62 படத்திற்காகவும் நயன்தாராவிடம் பேசப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கும் 10 கோடி வரை நயன்தாராவிற்கு சம்பளமாக பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.