காபி வித் கரண் நிகழ்ச்சியில் சமந்தாவை தூக்கிய அக்‌ஷய் குமார்

0
180

நடிகைகள் ஜான்வி கபூர் மற்றும் சாரா அலி கானின் காஃபி வித் கரண் 7 எபிசோடிற்குப் பிறகு, அக்‌ஷய் குமார் மற்றும் சமந்தா ரூத் பிரபு ஆகியோர் வரும் வியாழன் அன்று ஒளிபரப்பாகவிருக்கும் எபிசோடில் கலந்துக் கொள்ளவிருக்கின்றனர். திரைப்படத் தயாரிப்பாளர் கரண் ஜோஹர் சமூக வலைதளங்களில் அந்த எபிசோடின் ப்ரோமோவைப் பகிர்ந்துள்ளார்.

எபிசோடின் ப்ரோமோ, ரசிகர்கள் எதிர்பார்த்தபடி, கலகலப்பான உரையாடல்கள், அரட்டைகள், கிளாமர், சீக்ரெட் என அனைத்தும் நிறைந்துள்ளது. நிகழ்ச்சியில் எண்ட்ரியாகும் போது, சமந்தாவை கையில் ஏந்தியபடி உள்ளே நுழைந்தார் அக்‌ஷய் குமார். டான்ஸ் ஆடச் சொல்லி கரண் ஜோஹர் கொடுத்த டாஸ்க்கிலும் அலேக்காக சமந்தாவை தூக்கினார் அக்‌ஷய்.