இரண்டாவது திருமணத்திற்கு தயாரான பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன்?

0
199

பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷன், மனைவி சுசானே கானை விவாகரத்து செய்த பின்னர், நடிகை சபா ஆசாத் உடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக செய்திகள் வலம் வருகின்றன. இந்த ஜோடி கடந்த சில மாதங்களாக ஒன்றாக வெளியில் சென்று வரும் படங்கள் இணையத்தில் வெளியாகிய வண்ணம் உள்ளன. கரண் ஜோஹரின் 50-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஒன்றாக கலந்துக் கொண்டதன் மூலம் அவர்கள் கிட்டத்தட்ட தங்கள் உறவை அதிகாரப்பூர்வமாக்கியுள்ளனர்.

சமீபத்தில், ஹ்ரித்திக் மற்றும் சபா விரைவில் திருமணம் செய்துக் கொண்டு தங்கள் உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. இருப்பினும், IndiaToday.in-ன் அறிக்கையின்படி, அவர்கள் திருமணம் செய்துக் கொள்ள அவசரப்படவில்லை எனத் தெரிகிறது.

இந்தியா டுடே வெளியிட்டுள்ள செய்தியில், ”ஹ்ரித்திக் ரோஷனும், சபா ஆசாத்தும் மகிழ்ச்சியான உறவில் உள்ளனர். அவர்கள் ஒன்றாக அதிக நேரம் செலவிடுவதுடன் விடுமுறைக்காக வெளிநாடுகளுக்கும் சென்று வருகிறார்கள். சுசானேவுடன் மிகவும் அன்பாகவும் நல்ல ரிலேஷன்ஷிப்பிலும் இருக்கிறார் சபா. மேலும் ஹ்ரித்திக்கின் குழந்தைகளுடனும் நெருக்கம் காட்டி வருகிறார். இருப்பினும், சபாவும், ஹ்ரித்திக்கும் திருமணம் செய்து கொள்ளும் அவசரத்தில் இல்லை. அவர்கள் ஒவ்வொரு நாளும் தங்கள் ரிலேஷன்ஷிப்பை ரசித்து அனுபவிக்கிறார்கள். திருமணம் செய்து கொள்ள வேண்டுமா எனவும் யோசித்து வருகின்றனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.