ஆஸ்திரேலியாவின் மிக மோசமான குற்ற கும்பலின் தலைவனாக கருதப்படும் மார்க் புடில் மெல்போர்னுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
அவர் இன்று மெல்போர்ன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
40 மில்லியன் டொலர்களுக்கு மேல் பெறுமதியான 160 கிலோ கொக்கேய்னை ஆஸ்திரேலியாவிற்கு கொண்டு வந்தமை தொடர்பில் 02 குற்றச்சாட்டுக்கள் அவர் மீது சுமத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
துருக்கியில் இருந்து நாடு கடத்தப்பட்ட மார்க் புடில் நேற்று டார்வினுக்கு அழைத்து வரப்பட்டு சிறப்பு விமானம் மூலம் இன்று மெல்போர்னுக்கு அழைத்து வரப்பட்டார்.
விசாரணையின் முடிவில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக ஆயுள் தண்டனை கிடைக்கும் என கூறப்படுகின்றது.