Cinema அங்காடித் தெரு திரைப்படத்தின் நடிகை காலமானார்

அங்காடித் தெரு திரைப்படத்தின் நடிகை காலமானார்

-

இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான அங்காடித் தெரு படத்தில் துணைநடிகையாக நடித்து பிரபலமான நடிகை சிந்து மார்பக புற்றுநோய் பாதிப்பு காரணமாக இன்று அதிகாலை 2.15 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிந்து கடந்த சில ஆண்டுகளாகவே கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் தலைகாட்டிய சிந்து சில படங்களில் நடித்துள்ளார்.

சிறு வயதில் இருந்தே வறுமையில் வாடி வந்த சிந்துவுக்கு வாழ்வில் ஏகப்பட்ட கொடுமைகளும், வலிகளும், சோகங்கள் மட்டுமே நிறைந்துள்ளன.

சிறுமியாக இருக்கும் போதே சிந்துவுக்கு 14 வயதிலேயே அவரது வீட்டில் திருமணம் செய்து வைத்து விட்டனர்.

அதே ஆண்டு ஒரு குழந்தையையும் பெற்று விட்ட நடிகை சிந்து கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மீண்டும் அப்பா வீட்டுக்கே வந்து விட்ட சோகமும் தனது குழந்தையை காப்பாற்ற போராடியதையும் சமீபத்திய வலி நிறைந்த பேட்டிகளில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

சிட்னி ஒலிம்பிக் பூங்காவில் இன்று என்ஆர்எல் இறுதிப் போட்டி

NRL கிராண்ட் ஃபைனல் இன்று இரவு 07.30 மணிக்கு சிட்னி ஒலிம்பிக் பார்க் மைதானத்தில் தொடங்க உள்ளது. Penrith...

கடந்த ஆண்டு 12 மாதங்களில் அதிக பதிவாகியது நிதி புகார்கள் என கணிப்பு

கடந்த 12 மாத காலப்பகுதியில் அவுஸ்திரேலிய நிதி முறைப்பாடுகள் அதிகாரசபைக்கு அதிகளவு முறைப்பாடுகள் கிடைத்துள்ளது. அதன்படி, 96,987 புகார்கள்...

மேற்கு ஆஸ்திரேலியாவில் பள்ளி வன்முறையை கட்டுப்படுத்த புதிய சட்டங்கள்

மேற்கு ஆஸ்திரேலிய அரசு பள்ளி வன்முறைகளை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. வன்முறை சம்பவங்கள் தொடர்பாக...

ஆஸ்திரேலியாவில் எரிபொருள் விலை எப்போது குறையும்?

அவுஸ்திரேலியாவில் எரிபொருள் விலை குறைவதை அடுத்த வருட ஆரம்பம் வரை எதிர்பார்க்க முடியாது என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் எரிபொருள் விலை எப்போது குறையும்?

அவுஸ்திரேலியாவில் எரிபொருள் விலை குறைவதை அடுத்த வருட ஆரம்பம் வரை எதிர்பார்க்க முடியாது என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் வேகமாக குறைந்து வரும் வேலை வாய்ப்புகள்

ஆஸ்திரேலியாவில் ஆகஸ்ட் மாதத்தில் வேலை காலியிடங்களின் எண்ணிக்கை வேகமாக குறைந்துள்ளதாக புள்ளியியல் அலுவலகம் அறிவித்துள்ளது. அதன்படி, ஆகஸ்ட் மாதத்தில்...