ஆஸ்திரேலியாவில் அடுத்த வாரத்திலிருந்து கோவிட்-19 தடுப்பூசியை 4ஆவது முறையாகப் போடும் பணி விரிவுபடுத்தப்படுகிறது.
எளிதில் பரவக்கூடிய B-A-4, B-A-5 வகை ஒமிக்ரோன் கொரோனா வைரஸ் மருத்துவமனையில் சேர்க்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துகொண்டே இருக்கிறது.
எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து 30 வயதும் அதற்கும் மேற்பட்ட வயதுடையோரும் 4ஆவது முறையாகத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம்.
புதிய மாற்றத்தால் 7 மில்லியனுக்கும் அதிகமானோர் 2ஆவது booster தடுப்பூசியைப் போடத் தகுதிபெறுவர்.
இதுவரை 65 வயதுக்கு மேற்பட்டோர் அல்லது கடும் நோயால் பாதிக்கப்பட்டோருக்கு மட்டும் அந்தத் தெரிவு வழங்கப்பட்டது.
ஆஸ்திரேலியாவில் சுமார் 4ஆயிரம் பேர் கோவிட்-19 வைரஸ் தொற்றினால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரைப் பொறுத்தவரை, கடந்த பிப்ரவரி மாதத்துக்குப் பிறகு அதுவே ஆக அதிக எண்ணிக்கை.