ஆஸ்திரேலியா இந்தோனேசியா வட்டாரத்தோடு மேலும் இறுக்கமான உறவை மேம்படுத்த முனைவதாக அந்நாட்டுப் பிரதமர் அன்டனி அல்பனீசி (Anthony Albanese) கூறியிருக்கிறார்.
இந்தோனேசியாவுக்கு மேற்கொண்டுள்ள முதல் அதிகாரத்துவப் பயணத்தின்போது அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு இந்தோனேசியா முக்கிய நட்பு நாடு என அவர் கூறியுள்ளார்.
பாதுகாப்பைப் பொறுத்தவரை இந்தோனேசியாவின் நட்பு மிக முக்கியம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிபர் அல்பனீசி தமது அமைச்சர்களோடு மூன்று நாள் பயணம் மேற்கொண்டு இந்தோனேசியாவுக்குச் சென்றிருக்கிறார்.
இன்று (6 ஜூன்) அவர் ஜக்கார்த்தாவில் இந்தோனேசிய அதிபர் ஜோக்கோ விடோடோவைச் (Joko Widodo) சந்திக்கிறார்.
பொதுவாக ஆஸ்திரேலியாவில் புதிய பிரதமர் பொறுப்பேற்றதும் இந்தோனேசியாவுக்கு முதலில் பயணம் மேற்கொள்வது வழக்கம்.